[X] Close

ஹெலிகாப்டர் கொள்முதல் ஊழல் வழக்கின் அப்ரூவர் ராஜீவ் சக்சேனா வெளிநாடு செல்ல தடை


  • kamadenu
  • Posted: 27 Jun, 2019 08:17 am
  • அ+ அ-

ஹெலிகாப்டர் கொள்முதல் ஊழல் வழக்கில் அப்ரூவர் ஆக மாறிய ராஜீவ் சக்சேனா மருத்துவ சிகிச்சைக்காக வெளிநாடு செல்ல டெல்லி உயர் நீதிமன்றம் வழங்கிய அனுமதியை உச்ச நீதிமன்றம் நிறுத்தி வைத்துள்ளது.

ரூ.3,600 கோடி ஹெலிகாப்டர் கொள்முதல் ஊழல் விவகாரத்தில் இடைத்தரகராக செயல்பட்டதாகதுபாயை சேர்ந்த ராஜீவ் சக்சேனா கைது செய்யப்பட்டார். பின்னர் அவர் அப்ரூவராக மாறினார்.

இந்நிலையில் ரத்தப் புற்றுநோய் மற்றும் பிற பாதிப்புகளுக்கு ராஜீவ்சக்சேனா சிகிச்சை பெறுவதற்காக அவர் ஜூன் 25 முதல் ஜூலை 24 வரைஐக்கிய அரபு அமீரகம், பிரிட்டன் மற்றும் ஐரோப்பா செல்ல டெல்லி உயர் நீதிமன்றம் கடந்த 10-ம் தேதி அனுமதி வழங்கியது.

இதற்கு எதிராக அமலாக்கத் துறை உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது. இந்த வழக்கு நீதிபதிகள் சஞ்சீவ் கன்னா, பி.ஆர்.கவாய் ஆகியோர் அடங்கிய அமர்வு முன் நேற்று விசாரணைக்கு வந்தது.

அப்போது உயர் நீதிமன்ற உத்தரவை 3 வாரத்திற்கு நிறுத்திவைத்த நீதிபதிகள், அமலாக்கத் துறை மனுவுக்கு பதில் அளிக்க சக்சேனாவுக்கு உத்தரவிட்டர். மேலும் சக்சேனாவின் உடல்நிலையை பரிசோதித்து 3 வாரங்களுக்குள் அறிக்கை அளிக்க எய்ம்ஸ் மருத்துவமனை இயக்குநருக்கு உத்தரவிட்டனர்.

மேலும், ராஜீவ் சக்சேனாவுக்கு பிணையத் தொகையாக ரூ.10 கோடிசெலுத்த அவரது உறவினர்கள் தயாராக உள்ளனரா என்பதை தெரிவிக்குமாறு அவரது வழக்கறிஞரிடம் தெரிவித்தனர்.

இந்த வழக்கில் அமலாக்கத்துறை சார்பில் சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா வாதிடும்போது, “இந்த வழக்கில் பிற குற்றங்கள் தொடர்பாக புதிய உண்மைகள் வெளிவந்துள்ளன. இது தொடர்பாக சக்சேனாவுக்கு எதிராக சிபிஐ விரைவில் வழக்குப் பதிவு செய்ய உள்ளது. சக்சேனா வெளிநாடு செல்ல அனுமதிக்கும் உத்தரவை புதிய உண்மைகளின் அடிப்படையில் ஆராய வேண்டும்” என்றார்.

Advt:

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close