[X] Close

உச்சத்தில் இருந்த தங்க விலை: ஒரு பவுனுக்கு ரூ.376 குறைந்தது


376

  • kamadenu
  • Posted: 26 Jun, 2019 13:34 pm
  • அ+ அ-

கடந்த 10 நாட்களாக ஏறுமுகத்தில் இருந்த தங்கம் மற்றும் வெள்ளியின் விலை இன்று (புதன்கிழமை) கணிசமான அளவு குறைந்துள்ளது.

வரலாறு காணாத வகையில் 26,464 ரூபாய்க்கு நேற்று விற்பனையான ஒரு பவுன் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று  ரூ.376 குறைந்தது ரூ.26,088 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது

சர்வதேச சந்தையில் ஏற்பட்ட மாற்றத்தால், சென்னையில் தங்கத்தின் விலை இதுவரை இல்லாத அளவுக்கு உயர்ந்தது. இதனால் கடந்த இரண்டு நாட்களில் மட்டும் ஒரு பவுன் தங்கத்தின் விலை ரூ.992 அதிகரித்தது.

இந்நிலையில் இன்று காலை நிலவரப்படி, தங்கத்தின் விலை சரிவைச் சந்தித்திருக்கிறது. இதனால் சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை  ரூ.26,088 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. 22 கேரட் கொண்ட ஒரு கிராம் தங்கம் ரூ.3 ஆயிரத்து 261-க்கு விற்கப்படுகிறது. இதுவே, நேற்று ரூ.3 ஆயிரத்து 303-க்கு விற்கப்பட்டது.

அதேபோல 24 கேரட் சுத்தத் தங்கத்தின் விலை ரூ.27 ஆயிரத்து 352 ஆகக் குறைந்துள்ளது.  அதேபோல வெள்ளியின் விலையும் கிராம் ஒன்றுக்கு 80 காசுகள் விலை உயர்ந்து 40 ரூபாய் 80 காசுகளுக்கு விற்பனை ஆகிறது.

கடந்த ஒரு வாரத்தில் தங்கத்தின் விலை பவுன் ஒன்றுக்கு 1,408 ரூபாய் உயர்ந்த நிலையில், தற்போது விலை குறைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Advt:

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close