[X] Close

ஆண்டு வருமானம் ரூ. 60 லட்சம்: சமோசா வியாபாரிக்கு வரித்துறை நோட்டீஸ்


60

  • kamadenu
  • Posted: 26 Jun, 2019 09:16 am
  • அ+ அ-

உத்தரப்பிரதேச மாநிலம் அலி கரில் சமோசா, கச்சோரி வியா பாரம் செய்யும் வர்த்தகரின் ஆண்டு வருமானம் ரூ.60 லட்சமாக உள்ளது.

இங்குள்ள சீமா திரையரங் கம் அருகில் உள்ளது முகேஷ் கச்சோரி என்ற பெயரிலான சிறிய கடை. இப்பகுதியில் இந்த கடை மிகவும் பிரபலம்.

அதிகாரிகள் ரகசிய ஆய்வு

இந்தக் கடையில் சமோசா மற்றும் கச்சோரி மிகவும் பிரப லம். காலையில் தொடங்கி இரவு முழுவதும் வியாபாரம்தான். எப் போதும் கூட்டம் அலை மோதும்.

சமீபத்தில் இவரது கடையின் வர்த்தகம் குறித்து யாரோ சிலர் வணிக வரித்துறையினரிடம் புகார் அளித்துள்ளனர். இதைத் தொடர்ந்து வர்த்தகத் துறை அதிகாரிகள் அருகில் உள்ள கடையில் அமர்ந்து இவர் கடை வருமானத்தை கணக்கெடுத்தனர். எப்படி பார்த்தாலும் ஒரு ஆண்டுக்கு குறைந்தது ரூ. 60 லட்சம் முதல் ரூ.1 கோடி வரை வரு மானம் இருக்கும் என கணக் கிட்டனர்.

இதைத் தொடர்ந்து கடை உரிமையாளரான முகேஷுக்கு நோட்டீஸை அளித்தனர். அதில் இவர் கடை ஜிஎஸ்டி-யில் பதிவு செய்யப்படவில்லை, வரியும் செலுத்தவில்லை என்று கூறி நோட்டீஸ் அளித்தனர்.

இது குறித்து கருத்து தெரிவித்த முகேஷ், தனக்கு இதுபோன்ற விவரம் ஏதும் தெரியாது என்று குறிப்பிட்டார். 12 ஆண்டுகளாக இந்த வியாபாரத்தில் ஈடுபட்டு வருவதாகவும், தன்னை போன்ற சாதாரண மக்கள் வாழ்வாதாரத் துக்காக இத்தகைய தொழிலை மேற்கொண்டுள்ளதாகக் குறிப் பிட்டார்.

Advt:

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close