[X] Close

கூகுள் மேப்பிலிருந்து 30 லட்சம் போலி நிறுவன முகவரிகள் நீக்கம்


30

  • kamadenu
  • Posted: 25 Jun, 2019 09:33 am
  • அ+ அ-

கடந்த ஆண்டில் கூகுள் மேப்பிலிருந்து 30 லட்சம் போலி நிறுவன முகவரிகளை நீக்கியுள்ளதாக கூகுள் நிறுவனம் தெரிவித்துள்ளது.

தொழில் நடத்துவதாக கூறி வாடிக்கையாளர்களை ஏமாற்றிவந்த போலியாக ஜோடிக்கப்பட்ட நிறுவனங்கள் இவை என்று கூகுள் தனது வலைப்பக்க அறிக்கையில் தெரிவித்துள்ளது. கூகுள் பலவிதங்களிலும் தொழில்களின் வளர்ச்சிக்காக உதவும் ஒரு இணைய சேவை நிறுவனமாகும். இது தகவல்களைப் பரிமாறுவதிலிருந்து, தொழில்கள் வாடிக்கையாளர்கள் இடையே பாலமாகவும் செயல்படுகிறது.

மேலும் விளம்பரம் செய்யவும் உதவுகிறது. கூகுள் நிறுவனத்தின் கூகுள் மேப் பல விதங்களிலும் உதவியாக உள்ளது. ஆனால், கூகுள் மேப்பில் 30 லட்சம் போலி நிறுவனங்கள் செயல்பட்டு வருவதாகக் கடந்த ஆண்டு கூகுள் நிறுவனம் கண்டுபிடித்துள்ளது. இந்த நிறுவனங்களின் முகவரிகளை கூகுள் மேப்பிலிருந்து நீக்கியுள்ளதாகவும் கூகுள் நிறுவனம் தெரிவித்துள்ளது.

இவற்றில் 90 சதவீத நிறுவனங்களின் முகவரிகளை பயனாளர்கள் பார்ப்பதற்கு முன்பே அடையாளம் காணப்பட்டு நீக்கப்பட்டுள்ளது. 2.5 லட்சம் நிறுவனங்கள் பயனாளர்களின் பின்னூட்டங்களின் அடிப்படையில் நீக்கப்பட்டுள்ளது என கூகுள் நிறுவனம் கூறியுள்ளது.

Advt:

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close