[X] Close

வால்மார்ட்டுக்கு பங்கு விற்பனை: பின்னி பன்சாலுக்கு ரூ.531 கோடி வருமானம்


531

  • kamadenu
  • Posted: 25 Jun, 2019 09:31 am
  • அ+ அ-

பின்னி பன்சால் பிளிப்கார்ட்டில் தன் வசம் இருந்த பங்குகளைக் கணிசமாக வால்மார்ட்டுக்கு விற்றுள்ளார். இதன்மூலம் அவருக்கு ரூ.531 கோடி வருமானமாகக் கிடைத்துள்ளது. இந்தத் தகவலை பிளிப்கார்ட் நிறுவனம் பங்குச்சந்தைக்கு அளித்துள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.

இந்தியாவின் முன்னணி இ-காமர்ஸ் நிறுவனமான பிளிப்கார்ட்டின் இணை நிறுவனர் பின்னி பன்சால் அந்நிறுவனத்தில் தன்னுடைய பங்குகளைக் கணிசமாகக் குறைத்துள்ளார். அமெரிக்க நிறுவனமான வால்மார்ட்டிடம் பிளிப்கார்ட்டின் பெரும்பான்மை பங்குகளை ஏற்கெனவே விற்றுவிட்ட நிலையில் தன் வசம் இருந்த 3.85 சதவீத பங்குகளில் 0.33 சதவீத பங்குகளைத் தற்போது விற்றுள்ளார்.

வால்மார்ட்டின் லக்சம்பர்கில் உள்ள ஃபிட் ஹோல்டிங்ஸ் எஸ்ஏஆர்எல் என்ற நிறுவனத்துக்கு இந்தப் பங்குகள் விற்கப்பட்டுள்ளன. அவர் இதுவரை மொத்தம் 54 லட்சம் பங்குகளை விற்றுள்ளதாகவும், அதன் மதிப்பு ரூ.531 கோடி எனவும் பிளிப்கார்ட் பங்குச் சந்தைக்கு அளித்துள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது. 2018 மே மாதத்தில் வால்மார்ட் நிறுவனம் பிளிப்கார்ட்டின் 77 சதவீத பங்குகளைக் கைப்பற்றியது. அப்போது பிளிப்கார்ட்டின் நிறுவனர்களில் ஒருவரான சஞ்சய் பன்சால் நிறுவனத்திலிருந்து வெளியேறினார். பின்னி பன்சால் மட்டும் நிர்வாகத்தில் பொறுப்பு வகித்தார்.

ஆனால், பின்னர் பின்னி பன்சால் மீது பாலியல் குற்றச்சாட்டுகளும் சர்ச்சைகளும் எழுந்தன. அதைத் தொடர்ந்து 2018 நவம்பரில் அவர் தனது பதவியை ராஜினாமா செய்தார்.

Advt:

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close