[X] Close

ஹூண்டாய் - கியா இணைந்து குறைந்த விலை மின்சார கார் திட்டம்


  • kamadenu
  • Posted: 24 Jun, 2019 08:51 am
  • அ+ அ-

ஹூண்டாய் நிறுவனத்துடன் இணைந்து குறைந்த விலையிலான மின்சார கார்களைத் தயாரித்து இந்தியாவில் அறிமுகப்படுத்த திட்டமிட்டிருப்பதாக தென் கொரியவைச் சார்ந்த வாகனத் தயாரிப்பு நிறுவனமான கியா மோட்டார்ஸ் தெரிவித்துள்ளது.

ஹூண்டாய் மோட்டார்ஸ் குழுமத்தின் ஒரு அங்கமான இந்நிறுவனம் அடுத்த இரண்டு ஆண்டுகளில் நான்கு புதிய வகை கார்களை இந்திய சந்தையில் அறிமுகப்படுத்த இருக்கிறது. இந்நிலையில் குறைந்த விலை மின்சார கார்களை இந்தியாவில் அறிமுகப்படுத்துவது அந்நிறுவனத்தின் மற்றொரு திட்டமாக உள்ளது. இது குறித்து அந்நிறுவனம் கூறுகையில், நாங்கள் இந்தியாவில் குறைந்த விலையிலான மின்சார கார்களை அறிமுகப்படுத்த தயாராக இருக்கிறோம்.

ஆனால் எங்களுக்கு அரசின் ஒத்துழைப்பு தேவை. அரசின் ஒத்துழைப்பு இல்லாமல் இந்த திட்டம் சாத்தியப்படாது என்று கூறியுள்ளது. கடந்த ஆண்டு இந்திய அரசு ஃபேம் 2 என்ற ரூ.10,000 கோடி திட்டத்தை அறிவித்தது. அதன்படி, இரு சக்கர மின்சார வாகன தயாரிப்புகளுக்கு மானியம் வழங்கப்படும் என்று அறிவித்தது. மேலும் பொதுப் பயன்பாடுகளுக்குத் தயாரிக்கப்படும் மூன்று மற்றும் நான்கு சக்கர வாகனங்களுக்கும் இந்த மானியத் திட்டம் பொருந்தும் எனக் கூறப்பட்டது.

ஆனால், தனிப் பயன்பாடுகளுக்கென தயாரிக்கப்படும் மூன்று மற்றும் நான்கு சக்கர வாகனங்களுக்கு இந்தத் திட்டம் பொருந்தாது என்று அந்த திட்டத்தில் தெரிவிக்கப்பட்டு இருந்தது. இந்நிலையில், தனிப் பயன்பாட்டுக்கென தயாரிக்கப்படும் நான்கு சக்கர வாகனங்களுக்கும் மானியம் அளிக்கப்பட வேண்டும் என்று கியா நிறுவனம் வேண்டுகோள் விடுத்திருக்கிறது.

Advt:

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close