[X] Close

அரசு காப்பீட்டு நிறுவனங்களை ஒருங்கிணைக்க திட்டம்


  • kamadenu
  • Posted: 24 Jun, 2019 08:50 am
  • அ+ அ-

பொதுத் துறை காப்பீட்டு நிறுவனங்களை ஒருங்கிணைப்பதற்கான வெவ்வேறு சாத்தியங்களை அரசு பரிசீலித்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

பொதுத் துறை நிறுவனங்களின் பங்குகளைக் கணிசமாகக் குறைத்து அதன் மூலம் நிதித் திரட்ட அரசு முயற்சித்து வருகிறது. முந்தைய நிதியாண்டில் மொத்த பொதுத் துறை நிறுவனங்களின் பங்கு விலக்கல் இலக்கு ரூ.85,045 கோடியாக நிர்ணயிக்கப்பட்டிருந்தது. இது இந்த நிதியாண்டில் ரூ.90,000 கோடியாக நிர்ணயத்துள்ளது. அதன் ஒரு பகுதியாக பொதுத் துறை காப்பீட்டு நிறுவனங்களை ஒருங்கிணைக்க திட்டம் தீட்டி வருகிறது. இதற்கான முயற்சிகளை 2017-ம் ஆண்டிலிருந்து அரசு எடுத்து வருகிறது.

நியூ இந்தியா அசூரன்ஸ் நிறுவனத்துடன் நேஷனல் இன்சூரன்ஸ், ஓரியண்டல் இன்சூரன்ஸ், யுனைட்டெட் இன்சூரன்ஸ் ஆகிய நிறுவனங்களை இணைப்பதற்கான வழிகளை அரசு யோசித்து வருகிறது. மேலும் நேஷனல் இன்சூரன்ஸ், ஓரியண்டல் இன்சூரன்ஸ், யுனைட்டெட் இன்சூரனஸ் ஆகிய நிறுவனங்களின் பங்குகளை விற்பனை செய்வதற்கான வழிகளையும் பரிசீலித்து வருகிறது. கடந்த நிதியாண்டின் பட்ஜெட் தொடரில் இம்மூன்று காப்பீட்டு நிறுவனங்களையும் ஒரு குடையின் கீழ் இணைப்பதற்கான திட்டத்தை அரசு முன்மொழிந்திருந்தது.

பல்வேறு காரணங்களால் அந்த திட்டத்தை சாத்தியப்படுத்த முடியாமல் போனது. தற்போது இம்மூன்று நிறுவனங்களையும் நியூ இந்தியா அசூரன்ஸ் நிறுவனத்துடன் இணைத்து எல்.ஐ.சி நிறுவனம் போல் பெரிய அளவிலான ஒற்றை காப்பீட்டு நிறுவனமாக மாற்றுவதற்கு அரசு முயற்சித்து வருகிறது.

Advt:

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close