[X] Close

ஜெட் ஏர்வேஸ் மீதான திவால் நடவடிக்கை தொடங்கியது: 90 நாட்களுக்குள் முடிக்க என்சிஎல்டி உத்தரவு


90

  • kamadenu
  • Posted: 24 Jun, 2019 08:48 am
  • அ+ அ-

நிதி நெருக்கடியில் முற்றிலுமாக விமான சேவையை நிறுத்திய ஜெட் ஏர்வேஸ் மீதான திவால் நடவடிக்கைகள் தொடங்கப்பட்டதாக ஜெட் ஏர்வேஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.

கடன் சுமை, தொடர்ந்து செயல்படுத்த நிதி இல்லாமை போன்ற காரணங்களால் ஜெட் ஏர்வேஸ் கடந்த ஏப்ரல் 17 முதல்சேவைகளை நிறுத்தியது. இதையடுத்து இந்நிறுவனத்துக்கு கடன்கொடுத்த வங்கிகள் ஒன்றிணைந்து எஸ்பிஐ தலைமையில்குழு அமைத்து மீட்பு நடவடிக்கைகளைத் திட்டமிட்டன. ஆனால், யாரும் நிறுவனத்தின் பங்குகளை வாங்க முன்வரவில்லை. இதனால் எஸ்பிஐ ஜெட் ஏர்வேஸை திவால் நடவடிக்கைக்குக் கொண்டுசெல்ல என்சிஎல்டியிடம் மனுத்தாக்கல் செய்தது.

கடந்த ஜூன் 20-ம் தேதி இந்தமனுவை ஏற்றுக்கொண்ட என்சிஎல்டி திவால் நடவடிக்கைக்கு உத்தரவிட்டது. கிரான்ட் தார்ன்டன் நிறுவனத்தின் அதிகாரி ஆஷிஷ் சவுச்சாரியா திவால் நடவடிக்கையை முன்னெடுக்க உள்ளார். திவால் நடவடிக்கைகளுக்கு 180 நாட்கள்அவகாசம் உள்ள நிலையில், ‘தேசிய அளவிலான முக்கியத்துவம்’ காரணமாக 90 நாட்களுக்குள் திவால் நடவடிக்கைகளை முடிக்குமாறு என்சிஎல்டி அறிவுறுத்தியுள்ளது. இதையடுத்து, நேற்று ஞாயிற்றுக்கிழமை ஜெட்ஏர்வேஸ் தரப்பில் பங்குச் சந்தைக்கு அளித்த அறிக்கையில் திவால் நடவடிக்கைகள் தொடங்கப்பட்டதாகக் கூறியுள்ளது. இதன்படி நிறுவனத்தின் அனைத்து இயக்குநர்களின் பொறுப்புகளும் பதவிகளும் நீக்கப்பட்டதாகக் கூறியுள்ளது.

Advt:

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close