[X] Close

அரசு சுரங்க நிறுவனங்களில் தனியார் பங்களிப்பை ஊக்குவிக்க வேண்டும்: பிரதமர் நரேந்திர மோடியிடம் அனில் அகர்வால் கோரிக்கை


  • kamadenu
  • Posted: 24 Jun, 2019 08:50 am
  • அ+ அ-

என்எம்டிசி, ஹிந்துஸ்தான் சிங்க் லிமிடெட் உள்ளிட்ட ஐந்து அரசு சுரங்க நிறுவனங்களில் தனியார் பங்களிப்பை ஊக்குவிக்க அரசு முன்வர வேண்டும் என வேதாந்தா குழுமத் தலைவர் அனில் அகர்வால் பிரதமர் நரேந்திர மோடியிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

நிதி ஆயோக் பிரதமர் நரேந்திரமோடி தலைமையில் கடந்த சனிக்கிழமை பொருளாதார வல்லுநர்கள், தொழிலதிபர்களுடன் பட்ஜெட்டுக்கு முந்தைய கலந்தாய்வுக் கூட்டத்தை ஏற்பாடு செய்திருந்தது. அதில் கலந்துகொண்ட மூன்றுதொழிலதிபர்களில் உலோக உற்பத்தியில் ஈடுபட்டுள்ள வேதாந்தா குழுமத்தின் தலைவர் அனில் அகர்வாலும் ஒருவர். அவர் அக்கூட்டத்தில் பிரதமரிடம் அரசு சுரங்க நிறுவனங்களின் பங்குகளைத் தனியாருக்கு விற்க வேண்டும் என்று கூறியுள்ளார்.

அவர் மேலும் கூறியதாவது, “அரசு தொழில்துறையில் மேலும் ஈடுபாட்டுடன் முடிவுகளை எடுக்கவேண்டியிருக்கிறது. அந்த வகையில் வேலை இழப்பு ஏற்படாதவகையிலான தனியார்மயப்படுத்தல் சிறந்த வழியாக இருக்கும். ஹிந்துஸ்தான் சிங்க் லிமிடெட், ஹிந்துஸ்தான் காப்பர் லிமிடெட், கோலார் தங்க சுரங்கம், யுரேனியம் கார்ப்பரேஷன் மற்றும் ஷிப்பிங் கார்ப்பரேஷன், என்எம்டிசி ஆகிய அரசு நிறுவனங்களில் தனியார் பங்களிப்பை ஊக்குவிக்க வேண்டும்.

ஹிந்துஸ்தான் சிங்க் லிமிடெட்நிறுவனத்தின் 64.9 சதவீத பங்குகளை நாங்கள் வாங்கும்போது அதில் பணியாளர்களின் எண்ணிக்கை 5 ஆயிரம். ஆனால், இன்றுபணியாளர்களின் எண்ணிக்கை 25 ஆயிரம். மீதமுள்ள பங்குகளையும் வாங்குவதற்கு தயாராக இருக்கிறோம். தனியாருக்கு பங்குகளை விற்பதன் மூலம், இந்தியாவுக்குத் தேவையான பெருமளவிலான உலோக தேவைகளைப் பூர்த்தி செய்துகொள்ள முடியும். இறக்குமதிக்கான தேவை இதன் மூலம் குறையும். இதன்மூலம் ரூ.27.8 லட்சம் கோடி மிச்சமாகும்.” என்றார்.

Advt:

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close