[X] Close

பொருளாதார நிபுணர்களுடன் பிரதமர் நரேந்திர மோடி ஆலோசனை


  • kamadenu
  • Posted: 23 Jun, 2019 08:36 am
  • அ+ அ-

அடுத்த மாதம் தாக்கல் செய்யப்பட உள்ள பட்ஜெட்டுக்கு முன்பாக பொருளாதார நிபுணர்களுடன் பிரதமர் நரேந்திர மோடி நேற்று ஆலோசனை நடத்தினார். இந்தக் கூட்டத்தில் பொருளாதார நிபுணர்கள், தொழில்துறை வல்லுநர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

இந்த கலந்துரையாடலுக்கு நிதி ஆயோக் ஏற்பாடு செய்திருந்தது. ஏறக்குறைய 40 பொருளாதார நிபுணர்கள் இக்கூட்டத்தில் கலந்து கொண்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த கலந்துரையாடல் நிகழ்வு ஐந்து கட்டங்களாக மேற்கொள்ளப்பட்டன. பொருளாதார கொள்கை, பேரியல் பொருளாதாரம், வேலை வாய்ப்பு, விவசாயம், நீர் மேலாண்மை, ஏற்றுமதி, கல்வி மற்றும் சுகாதாரம் ஆகிய பிரிவுகளில் விவாதங்கள் நடைபெற்றதாக பிரதமர் அலுவலகம் வெளியிட்ட செய்திக் குறிப்பு தெரிவிக்கிறது.

இந்தக் கூட்டத்தில் வர்த்தகத் துறை அமைச்சர் பியுஷ் கோயல், புள்ளியியல் மற்றும் திட்ட அமலாக்கத் துறை இணையமைச்சர் (தனிப்பொறுப்பு) ராவ் இந்தர்ஜீத் சிங் உள்ளிட்டோர் பங்கேற்றனர். அதேபோல நிதி ஆயோக் அமைப்பின் துணைத் தலைவர் ராஜீவ் குமார் மற்றும் அமைப்பின் மூத்த அதிகாரிகளும் பங்கேற்றனர்.

ஜூலை 5-ம் தேதி நிதி அமைச்சர் நிர்மலா சீதாரமான் பட்ஜெட் தாக்கல் செய்ய உள்ளார். தொடர்ந்து இரண்டாவது முறையாக மத்தியில் ஆட்சிப் பொறுப்பேற்றுள்ள மோடி அரசின் முதலாவது பட்ஜெட் இதுவாகும்.

Advt:

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close