[X] Close

பட்ஜெட் தயாரிப்புப் பணி தொடங்கியது


  • kamadenu
  • Posted: 23 Jun, 2019 08:39 am
  • அ+ அ-

நடப்பு நிதி ஆண்டுக்கான (2019-20) முழுமையான பட்ஜெட் தாக்கல் செய்வதற்கான பணிகள் நேற்று நிதி அமைச்சகத்தில் தொடங்கின.

பாரம்பரிய முறையில் அல்வா கிளறும் நிகழ்ச்சியோடு பட்ஜெட் தயாரிப்புப் பணிகள் தொடங்கின.

நடப்பு நிதி ஆண்டுக்கான இடைக்கால பட்ஜெட் கடந்த பிப்ரவரி மாதம் தாக்கல் செய்யப்பட்டது.

புதிய அரசு பொறுப்பேற்றவுடன் முழுமையான பட்ஜெட் ஜூலை 5-ம் தேதி தாக்கல் செய்யப்படும் என அறிவிக்கப்பட்டது. பட்ஜெட்டை மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்ய உள்ளார்.

நடப்பு பட்ஜெட்டில் எந்தெந்த துறைகளுக்கு முன்னுரிமை அளிப்பது என்பது குறித்து பட்ஜெட்டுக்கு முந்தைய ஆலோசனை கூட்டங்கள் கடந்த இரண்டு வாரங்களாக நடைபெற்றன. இதில் விவசாயிகள், தொழில் நிறுவன பிரதிநிதிகள், தொழிற்சங்கங்களை சேர்ந்தவர்கள் என சமூகத்தின் அனைத்து தரப்பு மக்களிடமும் கருத்துகளைக் கேட்டறிந்தார் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன். பட்ஜெட் தயாரிப்பு பணிகள் மிகவும் ரகசியமாக வைக்கப்பட வேண்டும். இதற்கான பணிகள் நிதி அமைச்சகத்தில் நேற்று தொடங்கியது. வழக்கமான நடைமுறையின்படி அல்வா கிளறி அனைவருக்கும் விநியோகிக்கப்பட்டது. நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அல்வாவை இணை அமைச்சர் அனுராக் தாகுர் மற்றும் நிதி அமைச்சக அதிகாரிகளுக்கு வழங்கினார்.

பட்ஜெட் தயாரிப்புப் பணியில் ஈடுபட்டுள்ள அனைத்து அரசு பணியாளர்களும் இரவு, பகலாக நிதி அமைச்சக வளாகத்திலேயே தங்கி, பட்ஜெட் தயாரிப்பர். பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்ட பிறகே இவர்கள் தங்கள் வீடுகளுக்குச் செல்ல முடியும். தங்கள் குடும்பத்தினருடன் தொலைபேசியிலோ அல்லது இணையதளம் மூலமாகவோ இவர்கள் தொடர்புகொள்ள முடியாது. நிதி அமைச்சகம் அமைந்துள்ள பகுதியின் கீழ்ப்பகுதியில் (பேஸ்மென்ட்) பட்ஜெட் தயாரிப்பு பணிகள் மிகுந்த கண்காணிப்புடன் தொடங்கின.

Advt:

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close