[X] Close

பைக் பாட்’ சேமிப்பு திட்டம் மூலம் ரூ.1,500 கோடி மோசடி: 2.25 லட்சம் பேர் பணத்தை இழந்து தவிப்பு


1-500-2-25

  • kamadenu
  • Posted: 23 Jun, 2019 08:38 am
  • அ+ அ-

இருசக்கர வாகனங்களில் முதலீடு செய்தால் இரட்டிப்பு லாபம் தருகிறோம் என்று கூறி நொய்டாவைச் சார்ந்த இரு சக்கர வாகனத்தை வாடகைக்கு விடும் நிறுவனம் ஒன்று ரூ.1,500 கோடி அளவில் மோசடி செய்துள்ளது.

சஞ்சை பதி என்பவர் கார்வித் இனோவேட்டிவ் புரொமோட்டர்ஸ் என்ற பெயரில் இருசக்கர வாகனவாடகைக்கு விடும் நிறுவனம் ஒன்றைத் தொடங்கி இருக்கிறார். இதற்காக பல இருசக்கர வாகனங்களை வாங்கி இருக்கிறார். அந்த வாகனத்தில் முதலீடு செய்வதாகக் கூறி பொதுமக்களிடமிருந்து பணம்வசூலித்து கடந்த இரண்டு ஆண்டுகளில் ரூ. 1,500 கோடி அளவில்மோசடி செய்துள்ளது விசாரணையில் தெரியவந்துள்ளது. கார்வித் இனோவேட்டிவ் புரொமோட்டர்ஸ் நிறுவனத்தை முதலில் தனது சொந்த ஊரில் 2010-ம் ஆண்டு தொடங்கி இருக்கிறார். பிறகு நொய்டா, அலிகார், காஸியாபாத், டெல்லி, ஜெய்ப்பூர் ஹரியாணா என பல்வேறு முக்கிய நகரங்களில் கிளைகளைத் திறந்திருக்கிறார். இந்தத் தொழிலுக்காக பத்தாயிரத்துக்கும் மேற்பட்ட இரு சக்கர வாகனங்களை வாங்கி இருக்கிறார்.

ஒரு வாகனத்தின் மீது ரூ. 62,000முதலீடு செய்தால் மாதாமாதம் ரூ.9,765 என ஒரு வருடத்திற்கு ஒரு லட்சம் ரூபாய் வருவாயாக அளிக்கப்படும் என்று `பைக் பாட்' என்ற புதிய முதலீட்டுத் திட்டத்தை கடந்த 2017-ம் ஆண்டு அந்நிறுவனம் அறிமுகப்படுத்தியிருக்கிறது. இதை நம்பி இரண்டு லட்சத்துக்கும் மேற்பட்ட நபர்கள் அந்நிறுவனத்தில் முதலீடு செய்துள்ளார்கள். இந்நிலையில் சுனில் குமார் மீரா என்பவர் ரூ.34 லட்சத்தை இந்தத் திட்டத்தில் முதலீடு செய்திருக்கிறார். அவருக்கு மாதாமாதம் ரூ.6.45 லட்சம் அளிக்கப்படும் என்று அந்நிறுவனம் கூறியிருக்கிறது.

மாதங்கள் கடந்த பிறகும் அவர்களிடமிருந்து எந்தத் தகவலும் வராததால் அந்நிறுவனத்தின் மீது அவருக்கு சந்தேகம் ஏற்பட்டு இருக்கிறது. அதைத் தொடர்ந்து அவர் அந்நிறுவனத்தின் மீது தாத்ரி காவல் நிலையத்தில் கடந்த பிப்ரவரி மாதம் புகார் அளித்துள்ளார். இந்நிலையில் அந்நிறுவனம் குறித்து வெவ்வேறு புகார்கள் வரவே காவல் துறையினர் அந்நிறுவனத்தின் மீது பல்வேறு பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர். சஞ்சய்பதியோடு சேர்த்து அந்நிறுவனத்தின் ஐந்து இயக்குனர்கள் மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டுஇருக்கிறது. அவர்களிடமிருந்த பல சொகுசு கார்கள் உள்ளிட்ட நூற்றுக்கும் மேற்பட்ட வாகனங்களை காவல் துறையினர் பறிமுதல் செய்துள்ளனர்.

Advt:

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close