[X] Close

மெகுல் சோக்ஸியை விமான ஆம்புலன்ஸ் மூலம் இந்தியா கொண்டு வர முடிவு


  • kamadenu
  • Posted: 23 Jun, 2019 08:37 am
  • அ+ அ-

பஞ்சாப் நேஷனல் வங்கியில் நிதி மோசடி செய்து வெளிநாடு தப்பிச்சென்ற குற்றவாளி மெகுல் சோக்ஸியை விமான ஆம்புலன்ஸ் மூலம் இந்தியாவுக்கு அழைத்துவர தயாராக இருப்பதாக அமலாக்கத் துறை தெரிவித்துள்ளது.

மெகுல் சோக்ஸி மற்றும் நீரவ் மோடி ஆகிய இருவரும் பஞ்சாப் நேஷனல் வங்கியில் ரூ.14,000 கோடி நிதி மோசடி செய்துவிட்டு கடந்த ஆண்டு வெளிநாடு தப்பிச் சென்றுவிட்டனர். இதில் மெகுல் சோக்ஸியை வழக்கு விசாரணைக்காக இந்தியாக்கு அழைத்து வர அரசு உத்தரவிட்டு இருந்தது. இந்நிலையில், உடல்நிலை சரியில்லாத காரணத்தால் தற்போது வழக்கு விசாரணைக்காக இந்தியா வர இயலாது. உடல் நடலம் தேறியதும் விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு அளிப்பதாக மெகுல் சோக்ஸி சார்பாக மும்பை உயர் நீதிமன்றத்தில் கடந்த வாரம் மனுதாக்கல் செய்திருந்தனர்.

தற்போது மெகுல் சோக்ஸி ஆண்டிகுவா பார்புடா தீவில் தஞ்சம் அடைந்துள்ளார். அந்நாட்டு அரசு கடந்த ஆண்டு அவருக்கு குடியுரிமை வழங்கியுள்ளது. நீதிமன்ற வழக்கிலிருந்து தப்பிப்பதற்காகவே உடல் நிலை சரியில்லை என்று கூறுகிறார். அதற்கு பதில் அளிக்கும் விதமாக மும்பை உயர் நீதி மன்றத்தில் அமலாக்கத் துறை, பதில் மனுத் தாக்கல் செய்துள்ளது.

Advt:

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close