[X] Close

ஜிஎஸ்டி ரிட்டர்ன் தாக்கல் செய்ய ஆகஸ்ட் 30 வரை அவகாசம் நீட்டிப்பு


30

  • kamadenu
  • Posted: 22 Jun, 2019 08:17 am
  • அ+ அ-

சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி) ரிட்டர்ன் படிவம் தாக் கல் செய்வதற்கான கால அவ காசம் ஆகஸ்ட் 30 வரை நீட்டிக்கப் பட்டுள்ளது. டெல்லியில் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் நடைபெற்ற 35-வது ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டது.

நாடாளுமன்ற பொதுத் தேர்த லுக்குப் பிறகு நடைபெறும் முதலாவது கூட்டம் இதுவாகும்.

ஒருபக்க ஜிஎஸ்டி ரிட்டர்ன் விண்ணப்ப முறை அடுத்த ஆண்டு ஜனவரி முதல் அமலுக்கு வரும் என்றும் இக்கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது.

ஜிஎஸ்டி-க்கு பதிவு செய்வதற் கான முறை எளிதாக்கப்பட்டுள்ளது. ஆதார் அடையாள அட்டை மட் டுமே ஆவணமாகக் கொண்டு பதிவு செய்யும் முறை இனி நடை முறைப்படுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தற்போது வரை ஜிஎஸ்டி பதி வுக்கு பல ஆவணங்கள் தாக்கல் செய்ய வேண்டியிருந்தது. இனி ஆதார் மட்டுமே போதும் என நடைமுறை எளிமைப்படுத்தப் பட்டுள்ளது.

ஆதார் பயன்படுத்தி ஆன்லைன் மூலமே பதிவு செய்ய முடியும். இதன் மூலம் ஜிஎஸ்டிஎன் (ஜிஎஸ்டி நெட்வொர்க்) பதிவு செய்யலாம் என்று வருவாய்த்துறைச் செயலர் அஜய் பூஷண் பாண்டே தெரிவித்தார்.

நிறுவனங்கள் கொள்ளை லாபம் ஈட்டுவதைத் தடுக்கும் ஆணையத் தின் பதவிக் காலம் மேலும் இரண்டு ஆண்டுகளுக்கு நீட்டிக்கப் பட்டுள்ளது. நுகர்வோர் அளிக்கும் புகாரின் அடிப்படையில் நிறுவனங் கள் மீது இந்த ஆணையம் நட வடிக்கை எடுக்கும். ஜிஎஸ்டி வரிக் குறைப்பு பலனை நுகர்வோருக்கு அளிக்காத நிறுவனங்கள் மீது இந்த ஆணையம் 10 சதவீத அளவுக்கு அபராதம் விதிக்கும்.

பேட்டரியில் இயங்கும் வாக னங்களின் புழக்கத்தை அதிகரிக் கும் நோக்கில் அவற்றின் மீதான வரியை 12 சதவீதத்திலிருந்து 5 சதவீதமாகக் குறைக்க கவுன் சிலுக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது. பேட்டரிக்கான வரி 18 சதவீதத் திலிருந்து 12 சதவீதமாகக் குறைக் கவும் முடிவு செய்யப்பட்டு உள்ளது.

Advt:

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close