[X] Close

சட்டத்தை மீறும் நிறுவனங்கள் மீது கடும் நடவடிக்கை: அமைச்சர் பியூஷ் கோயல் எச்சரிக்கை


  • kamadenu
  • Posted: 22 Jun, 2019 08:18 am
  • அ+ அ-

தொழில் நிறுவனங்கள் சட்ட விதிமுறைகளை மதித்து முறை யாக நடக்க வேண்டும். விதி மீறல்களில் ஈடுபடும் நிறுவனங்கள் மீது மிகக் கடுமையான நடவ டிக்கை எடுக்கப்படும் என்று மத்திய வர்த்தகத் துறை அமைச்சர் பியூஷ் கோயல் எச்சரிக்கை விடுத் துள்ளார்.

அந்நிய முதலீடுகள் தொடர் பான நமது கொள்கையின்படி 51 சதவீதம் அளவில் மட்டும் அந்நிய முதலீடுகள் அனுமதிக்கப்பட்டு இருக்கிறது. அனைத்து நிறுவ னங்களும் இதை மதித்து நடக்க வேண்டும்.

அரசு வகுத்துள்ள சட்ட விதி களுக்கு உட்பட்டு செயல்படும் நிறுவனங்களுக்கு எந்தப் பிரச் சினையும் இல்லை என்பதற்கு உத்தரவாதம் தர முடியும். அதே போல் விதிகளை மீறி தவறான நடவடிக்கைகளில் ஈடுபடும் நிறுவ னங்கள் மிகப் பெரிய விளைவு களை எதிர்கொள்ள வேண்டி வரும் என்று பியூஷ் கோயல் தொழில் நிறுவனங்களுக்கான கூட்டமைப்பின் உறுப்பினர் களுடனான சந்திப்பில் கூறினார்.

மேலும், முறைகேடாக செயல் படும் நிறுவனங்கள் கடும் நடவ டிக்கைக்கு உட்படுத்தப்படுவதன் மூலமே நாட்டின் கட்டமைப்பிலும், தொழில்துறையினரின் மனநிலை களிலும் மாற்றங்களைக் கொண்டு வர முடியும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

50 துறைகள் தேர்வு

இந்தியாவின் உற்பத்தியை அதிகரிக்கும் பொருட்டு, 50 துறைகளை கண்டறிந்து அவற்றை மேம்படுத்தும் பணிகளில் ஈடுபட வேண்டும் என்று தொழில் மற்றும் உள்நாட்டு வர்த்தக் துறையை கேட்டுகொண்டுள்ளதாக அவர் கூறினார்.

Advt:

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close