[X] Close

ஜெட் ஏர்வேஸ் பங்குகள் 150 சதவீதம் உயர்வு


150

  • kamadenu
  • Posted: 21 Jun, 2019 09:25 am
  • அ+ அ-

திவால் நடவடிக்கை உட்படுத்தப்பட உள்ள நிலையிலும் ஜெட் ஏர்வேஸின் பங்கு விலை நேற்று 150 சதவீதம் உயர்ந்து வர்த்தகமானது.

எஸ்பிஐ தலைமையிலான வங்கிக் குழு ஜெட் ஏர்வேஸை மீட்க முடியாததால் திவால் நடவடிக்கைக்கு தேசிய நிறுவனங்கள் சட்ட தீர்ப்பாயத்திடம் மனுத்தாக்கல் செய்துள்ளது. இந்த மனுவின் மீதான விசாரணை நேற்று நடத்தப்பட்ட நிலையில் ஜெட் ஏர்வேஸின் பங்குகள் திடீரென்று உயர்ந்து வர்த்தகமாயின.

காலையில் வர்த்தக தொடக்கத்தில் ஜெட் ஏர்வேஸ் பங்கு விலை ரூ. 27 வரை இறங்கியது. இது வரலாறு காணாத இறக்கமாகப் பதிவானது. ஆனால், தொடர்ந்து பங்கு விலை சரசரவென உயர ஆரம்பித்து ரூ. 82.75 என்ற நிலைக்கு உயர்ந்தது. ஜெட் ஏர்வேஸ் பங்கு விலை கடந்த ஒரு வருடத்தில் 88 சதவிதம் வரை சரிந்தது குறிப்பிடத்தக்கது.

Advt:

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close