[X] Close

ஐஎம்எஃப் நிதியிலிருந்து சீனாவுக்கான கடனை அடைக்கக் கூடாது: பாகிஸ்தானுக்கு அமெரிக்கா நிபந்தனை


  • kamadenu
  • Posted: 20 Jun, 2019 08:05 am
  • அ+ அ-

பாகிஸ்தானுக்கு கடன் அளிக்க சர்வதேச செலாவணி நிதியம் (ஐஎம்எஃப்) முன்வந்திருக்கிற நிலையில், ஐஎம்ஃஎப் அளிக்கும் நிதியைக் கொண்டு சீனாவுக்கான கடன்களை அடைக்கக் கூடாது என்று அமெரிக்க அரசு பாகிஸ்தானுக்கு நிபந்தனை விதித்திருக்கிறது.

ஐஎம்எஃப் வாஷிங்டன் நகரை தலைமையிடமாக கொண்டு 189 நாடுகளை உள்ளடக்கி செயல்பட்டு வரும் சர்வதேச அமைப்பு ஆகும். உலக நாடுகளின் பொருளாதார வளர்ச்சி, வர்த்தகம், வேலைவாய்ப்பு ஆகியவற்றை மேம்படுத்துவதற்காக தொடங்கப்பட்டது.

பாகிஸ்தான் அரசு தற்போது பொருளாதர சரிவை எதிர்கொண்டு வருகிறது. அதை சரி செய்வதற்கும், நாட்டின் வளர்ச்சியை மேம்படுத்துவதற்கும் தேவையான நிதியை ஐஎம்எஃப்-பிடமிருந்து கடனாகப் பெற பாகிஸ்தான் வேண்டுதல் விடுத்திருந்தது. அதைத் தொடர்ந்து ஆறு பில்லியன் டாலர் நிதியை கடனாக அளிப்பதற்கு ஐஎம்எஃப்-க்கும் பாகிஸ்தானுக்கும் இடையே கடந்த மாதம் ஒப்பந்தம் ஆனது. இந்நிலையில், ஐஎம்எஃப் அளிக்கும் நிதியைப் பயன்படுத்தி பாகிஸ்தான் தனது சீனாவுக்கான கடன்களை அடைக்கக் கூடாது என்று அமெரிக்க அரசு நிபந்தனை விதித்திருக்கிறது.

சீனா - பாகிஸ்தான் இடையிலான பொருளாதார ஒப்பந்தத்தின் அடிப்படையில் பாகிஸ்தானின் உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதற்கு சீனா பெரும் முதலீடுகளை மேற்கொண்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Advt:

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close