[X] Close

பங்கு விலக்கல் நடவடிக்கையை எதிர்த்து பாரதிய மஸ்தூர் சங்கம் பிரசாரம் செய்ய முடிவு


  • kamadenu
  • Posted: 19 Jun, 2019 07:42 am
  • அ+ அ-

மத்திய அரசு நிறுவனங்களின் பங்குகளை விலக்கிக் கொள்வது தொடர்பான நடவடிக்கையை எதிர்த்து நாடு முழுவதும் பிரசாரம் செய்யப்போவதாக பாரதிய மஸ்தூர் சங்கம் அறிவித்துள்ளது.

ஆர்எஸ்எஸ் அமைப்பின் அங்கமாக திகழும் தொழிலாளர் கூட்டமைப்பான பாரதிய மஸ்தூர் சங்கம் நிதி ஆயோக் அறிவித்த திட்டத்தைக் கண்டித்து இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

கடந்த வாரம் பங்கு விலக்கல் நடவடிக்கையை எடுக்க வேண்டிய 92 பொதுத்துறை நிறுவனங்களின் பெயர் பட்டியலை நிதி ஆயோக் வெளியிட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அரசு நிறுவனங்களை தனியாருக்கு விற்பதைக் கண்டித்து விழிப்புணர்வு பிரசாரம் செய்ய திட்டமிட்டுள்ளது.

பொதுத்துறை நிறுவனங்களை காப்போம் என்ற இந்த பிரசாரம் செப்டம்பர் 1-ம் தேதி தொடங்கி 7-ம் தேதி வரை நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

பிராந்திய அளவில் கூட்டங்கள் நடத்துவது, போராட்டம் நடத்துவது, பேரணிகள் உள்ளிட்ட பிரசாரங்களை மேற்கொள்ள முடிவு செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து நவம்பர் 15-ம் தேதி டெல்லியில் தேசிய அளவில் பொதுத்துறை நிறுவன ஊழியர்கள் பங்கேற்கும் மிகப் பெரிய மாநாட்டை நடத்தவும் திட்டமிடப்பட்டுள்ளது. இந்த மாநாட்டில், பொதுத்துறை நிறுவனங்கள் நாட்டின் கட்டமைப்பில் எந்த அளவுக்கு முக்கிய பங்காற்றி வருகின்றன என்பதை உணர்த்துவதற்கான கொள்கை அறிவிப்பும் வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது.

இதற்கு முன்னோட்டமாக ஒவ்வொரு தொழில் துறைசார்ந்த கருத்தரங்குகள், கூட்டங்கள் ஆகியவற்றை தொழிலாளர் சங்கங்களுடன் இணைந்து நடத்தவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. தொழிலாளர் சங்கங்களின் ஒருங்கிணைப்பு கூட்டத்தில் சுரங்கம், வங்கி, காப்பீடு, உருக்கு துறை மற்றும் பிஎஸ்என்எல், எம்டிஎன்எல், ஐஓசி, ஓஎன்ஜிசி, எப்சிஐ, என்டிபிசி, என்ஹெச்பிசி ஆகிய பொதுத்துறை நிறுவனங்களின் தொழிற்சங்க பிரதிநிதிகளும் பங்கேற்பர் என தெரிகிறது.

Advt:

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close