[X] Close

டி.வி. தயாரிப்பில் ஈடுபட ஒன் பிளஸ் நிறுவனம் திட்டம்


  • kamadenu
  • Posted: 18 Jun, 2019 08:27 am
  • அ+ அ-

பிரீமியம் ஸ்மார்ட்போன்கள் தயாரிப்பில் முன்னணியில் உள்ள ஒன் பிளஸ் இந்தியா நிறுவனம் அடுத்தகட்டமாக தொலைக்காட்சி பெட்டி தயாரிப்பில் ஈடுபட முடிவு செய்துள்ளது.

ஹைதராபாதில் இந்நிறுவனம் தொடங்கியுள்ள ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்தி மையத்தில் இதற்கான பணிகள் ஆரம்பமாகியுள்ளன. விரைவிலேயே டி.விக்களை அதுவும் பிரீமியம் டி.விக்களை தயாரிக்கப் போவதாக ஒன் பிளஸ் இந்தியா நிறுவனத்தின் பொது மேலாளர் விகாஸ் அகர்வால் தெரிவித்தார்.

3 நிறுவனங்களுடன் ஒப்பந்தம்

ஆன்லைன் மூலமான விற்பனையில் ஈடுபட்டு வந்த நிறுவனம் தற்போது ஆஃப்லைன் விற்பனையிலும் ஈடுபட முடிவுசெய்துள்ளது. இதற்காக பிராந்திய அளவில் பிரபலமாக உள்ள நிறுவனங்களுடன் ஒப்பந்தம் செய்து கொண்டுள்ளதாகவும் அவர் கூறினார். பூர்விகா (தமிழ்நாடு), சங்கீதா (கர்நாடகா), விஜய் சேல்ஸ் (மகாராஷ்டிரா) உள்ளிட்ட மொபைல்போன் வர்த்தக நிறுவனங்களுடன் ஒப்பந்தம் செய்துள்ளதாக குறிப்பிட்ட அவர் இதனால் ஆன்லைன் வர்த்தகம் பாதிக்க வாய்ப்பில்லை என்றும், புதிய வாடிக்கையாளர்களிடம் தங்கள் தயாரிப்புகள் சென்றடைய வழிஏற்படும் என்றும் நம்பிக்கை தெரிவித்தார்.

பிரத்யேக விற்பனையகங்களை பெருநகரங்கள் அனைத்திலும் தொடங்கியுள்ளோம். தமிழகத்தில் விற்பனையகங்களை அதிகம் கொண்டுள்ள பூர்விகா நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்துள்ளதால் விற்பனை அதிகரிக்கும். அல்ட்ரா பிரீமியம் தயாரிப்புகளை அறிமுகப்படுத்தி வருகிறோம். ரூ.45 ஆயிரத்துக்கும் மேலான தயாரிப்புகளுக்கு மிகச் சிறந்த வரவேற்பு கிடைத்து வருகிறது என்றார்.

 

Advt:

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close