[X] Close

திட்டமிட்ட மோசடியாளர் யஷோவர்தன் பிர்லா: யுகோ வங்கி அறிவிப்பு


  • kamadenu
  • Posted: 18 Jun, 2019 08:25 am
  • அ+ அ-

யாஷ் பிர்லா குழுமத்தின் தலைவர் யஷோவர்தன் பிர்லாவை திட்டமிட்ட மோசடியாளர் என அறிவித்துள்ளது யுகோ வங்கி. யஷோவர்தன் பிர்லா யுகோ வங்கியிலிருந்து பிர்லா சூர்யா லிமிடெட் நிறுவனத்துக்காக வாங்கிய ரூ.67.65 கோடி கடனைத் திருப்பிச் செலுத்த தவறியுள்ளார். எனவே அவரை திட்டமிட்டு கடனைத் திருப்பிச் செலுத்தாத மோசடியாளர் என வங்கித் தரப்பு கடந்த ஞாயிறு அன்று அறிவித்துள்ளது. அவர் செலுத்த தவறிய கடன் கணக்கையும் வாராக்கடன் கணக்காக அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பை அவரது புகைப்படத்துடன் நோட்டீஸ் மூலமாகவும் வெளியிட்டுள்ளது. இதுகுறித்து அந்த நோட்டீஸில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, “பிர்லா சூர்யா நிறுவனத்துக்கு மல்ட்டி கிரிஸ்டலின் சோலார் போட்டோவால்டிக் செல் உற்பத்திக்காக ரு.100 கோடி கடன் வழங்கப்பட்டுள்ளது. அந்தக் கடனில் ரூ.67.65 கோடி செலுத்தப்படாமல் நிலுவையில் உள்ளது. ஜூன் 3-ம் தேதி முதல் இந்தக் கணக்கு வாராக்கடனாக அறிவிக்கப்படுகிறது. முன்னதாக கடன் வாங்கிய யஷோவர்தன் பிர்லாவுக்கு தனிப்பட்ட முறையில் பல முறை நோட்டீஸ் அனுப்பியும் கடனைத் திருப்பிச் செலுத்த முயற்சிக்கவில்லை” என்று கூறியுள்ளது.

யுகோ வங்கி, யஷோவர்தன் பிர்லாவின் தாத்தா ராமேஷ்வர் தாஸ் பிர்லாவின் அண்ணன் ஜிடி பிர்லா அவர்களால் 1943-ல் தொடங்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

Advt:

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close