[X] Close

வேலை அல்ல, ஊதியம்தான் இந்தியாவின் பிரச்சினை: இன்ஃபோசிஸ் முன்னாள் சிஎப்ஒ கருத்து


  • kamadenu
  • Posted: 17 Jun, 2019 07:45 am
  • அ+ அ-

முறையான ஊதியமின்மைதான் இந்தியா எதிர்கொள்ளும் முக்கிய பிரச்சினை என்று இன்போஃசிஸ் நிறுவனத்தின் முன்னாள் தலைமை நிதி அதிகாரி மோகன்தாஸ் பாய் கருத்து தெரிவித்துள்ளார்.

‘இந்தியாவில் ஒவ்வொரு ஆண்டும் புதிய வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படுகின்றன. ஆனால் அவை இளம் பட்டதாரிகளுக்கான பொருத்தமான வேலைகளாக இருப்பதில்லை. ரூ.10,000 முதல் ரூ.15,000 வரை ஊதியம் தரக்கூடிய வேலைகள்தான் இந்தியாவில் அதிகமாக உருவாகி வருகின்றன.

நல்ல ஊதியம் அளிக்கக் கூடிய வேலைகள் இங்கு மிகக் குறைவு. இதன் விளைவாக இந்திய மக்களின் வாழ்க்கைமுறை மிக மோசமான நிலையில் உள்ளது’ என்றார். மேலும் அவர், ‘தரமான வேலை உருவாக்கத்தில் சீனாவின் வழிமுறைகளை இந்தியா பின்பற்ற வேண்டும். தொழிலாளர்களின் எண்ணிக்கையை அதிகப்படுத்துவது, வர்த்தகத்துக்கு ஏற்ற வகையில் நாட்டின் உள்கட்டமைப்பை உருவாக்குவது, ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுத் துறைகளில் அதிக அளவில் முதலீடு செய்வது போன்ற வழிமுறைகளை சீனா கடைபிடித்து வருகிறது.

இந்தியாவில் இன்னும் தொழிலாளர் வளம் முறைப்படுத்தப்படவில்லை. மேலும் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுத் துறைகளில் இந்தியா கவனம் செலுத்தத் தவறுகிறது' என்று அவர் கூறினார்.

Advt:

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close