[X] Close

ஸ்டெர்லைட் ஆலை மூடப்பட்டதால் ரூ.1,400 கோடி நஷ்டம்: வேதாந்தா குழுமத் தலைவர் அனில் அகர்வால் தகவல்


1-400

  • kamadenu
  • Posted: 17 Jun, 2019 07:44 am
  • அ+ அ-

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை ஒரு வருடம் மூடிக்கிடந்ததால் வேதாந்தா நிறுவனம் ரூ.1,400 கோடி நஷ்டத்தை சந்தித்துள்ளது என்று அதன் தலைவர் அனில் அகர்வால் தெரிவித்துள்ளார்.

தூத்துக்குடியில் இயங்கிவந்த ஸ்டெர்லைட் காப்பர் ஆலையால் சுற்றுச்சூழலுக்கு ஆபத்து என்று கூறப்பட்ட நிலையில், அந்த ஆலையை மூடக் கோரி போராட்டம் நடந்தது. போராட்டத்தின் போது போலீஸாரால் துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்ட நிலையில் 13 பேர் பலியாயினர். பலர் பலத்த காய மடைந்தனர். அந்த ஆலைக்கு எதி ராக தமிழகம் முழுவதும் பெரிய அளவில் எதிர்ப்பு கிளம்பிய நிலையில் அந்த ஆலையை நிரந் தமாக மூடும்படி கடந்த ஆண்டு மே மாதம் தமிழக அரசு உத்தரவிட்டது.

‘இந்தியாவின் காப்பர் தேவையை ஸ்டெர்லைட் ஆலை பூர்த்தி செய்து வந்தது. தற்போது ஆலை மூடப்பட்டுள்ளதால் இந்தி யாவுக்கு தேவையான காப்பர் வெளிநாடுகளிலிருந்து இறக்கு மதி செய்யப்படுகிறது. இது பொரு ளாதார ரீதியாக இந்தியாவுக்கு பாதிப்பை ஏற்படுத்தும்’ என்று அனில் அகர்வால் கூறியுள்ளார்.

மேலும் “பொருளாதார பிரச் சினைகளை தீர்ப்பதற்காகவாவது ஆலை மீண்டும் திறக்கப்பட வேண் டும். ஸ்டெர்லைட் ஆலை மூலம் 20,000 பேர் வேலைவாய்ப்பு பெற் றனர். தற்போது அனைவரும் வேலை இழந்துள்ளனர். இதனால் அவர்களின் குடும்பங்கள் பாதிக்கப் பட்டுள்ளன. மட்டுமில்லாமல் காப் பரை நம்பியிருக்கும் ஒரு லட்சம் வாடிக்கையாளர்களும் பாதிக்கப் பட்டுள்ளனர். போராட்டத்தின் போது ஏற்பட்ட இழப்புகள் நிச் சயம் வருத்தம் அளிக்கக்கூடிய ஒன்றுதான். ஆனால் தற்போது ஆலை மூடப்பட்டு இருப்பதாலும் அதே அளவிலான இழப்புகள் ஏற்பட்டுள்ளன” என்று அவர் கூறினார்.

வேதாந்தா நிறுவனத்தின் கடந்த ஆண்டு அறிக்கையில், நாட்டின் 675,000 டன் காப்பர் தேவையில் 33 சதவீத பங்களிப்பை ஸ்டெர்லைட் நிறுவனம் வழங்கியுள்ளதாகக் குறிப்பிடப்பட்டு இருக்கிறது.

ஆலை நிரந்தரமாக மூடப்பட வேண்டும் என்ற தமிழக அரசின் உத்தரவை எதிர்த்து கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் தேதிய பசுமை தீர்ப்பாயத்தில் முறையீடு செய்தது. இந்நிலையில் கடந்த பிப்ரவரி மாதம், உச்ச நீதிமன் றம் இந்த விவகாரத்தில் தலை யிட்டு, வேதாந்தா நிறுவனம் சென்னை உயர் நீதிமன்றத்தில் இது தொடர்பாக மனு அளிக்க வேண்டும் என்று கேட்டுக்கொண் டது. இந்நிலையில் அந்நிறுவனம் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு அளித்தது. கோடை விடு முறைக்கு பிறகு வழக்கு விசா ரணைக்கு வர இருக்கிறது. விரைவில் தீர்வு கிடைக்கும் என்று அவர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

தற்போதுள்ள தொழில் வளர்ச்சி காரணமாக வரும் ஆண் டில் இந்தியாவுக்கான காப்பர் தேவை 11.8 சதவீதம் உயரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Advt:

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close