[X] Close

இந்தியாவின் ஏற்றுமதி 3.93 சதவீதம் உயர்வு


3-93

  • kamadenu
  • Posted: 16 Jun, 2019 08:50 am
  • அ+ அ-

மே மாதம், இந்தியாவிலிருந்து செய்யப்பட்ட ஏற்றுமதிகளின் அளவு 3.93 சதவீதமாக உயர்ந்துள் ளது. தோல் பொருட்கள், கனரக பொருட்கள், நகை ஆபரணங்கள், இரும்பு ஆகியவற்றின் ஏற்றுமதி சரிந்திருந்த நிலையிலும், 29.99 பில்லியன் டாலர் அளவிற்கு மே மாதத்தில் ஏற்றுமதி இந்தியா விலிருந்து செய்யப்பட்டிருக்கிறது.

வர்த்தக பற்றாக்குறை

இறக்குமதிகளின் அளவு மே மாதம் 7.76 சதவீதமாக உயர்ந் துள்ளது. அதன் மதிப்பு 45.35 பில்லியன் டாலர் ஆகும். கடந்த ஆண்டு இதே காலத்தில் 14.62 பில்லியன் டாலராக இருந்த வர்த்தகப் பற்றாகுறை தற்போது 15.36 பில்லியன் டாலராக அதிகரித் துள்ளது.

சர்வதேச சந்தையில் காணப் படும் மந்தநிலை காரணமாக பொறியியல் பொருட்களின் ஏற்று மதியாளர்கள் பிரச்சினையை சந்தித்து வருகின்றனர். இதுதொடர் பாக அரசு உடனடியாக தலையிட்டு தீர்வு ஏற்படுத்த வேண்டும் என்று இஇபிசி தலைவர் ரவி சகேல் கூறியுள்ளார்.

மின்னணு சாதனங்கள், ஆடை கள், மருந்துப் பொருட்கள், ரசா யனங்கள் போன்ற பொருட்களின் ஏற்றுமதியும் மே மாதத்தில் உயர்ந் திருக்கிறது. ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் மொத்த ஏற்றுமதி 56.07 பில்லியன் டாலராக உள்ளது. இது சென்ற வருடம் ஏற்றுமதி யானதை விட 2.37 சதவீத உயர்வு ஆகும்.

இறக்குமதி உயர்வு

ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் மொத்த இறக்குமதி அளவு 86.75 பில்லியன் டாலராக உள்ளது. சென்ற ஆண்டின் இதே காலத்தில் இருந்ததை விட தற்போது 4.39 சதவீதம் உயர்ந்துள்ளது.

2018-19 நிதியாண்டில் மொத்த ஏற்றுமதி 9.06 சதவீத வளர்ச்சியை அடைந்துள்ளது. அதன் மொத்த மதிப்பு 331 பில்லியன் டாலர் ஆகும்.

Advt:

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close