[X] Close

ஐஎல் & எஃப்எஸ் விவகாரம்; தணிக்கை நிறுவனங்களிடம் என்எப்ஆர்ஏ விசாரணை


  • kamadenu
  • Posted: 16 Jun, 2019 08:49 am
  • அ+ அ-

நிதி நெருக்கடியில் முடங்கியுள்ள ஐஎல் & எஃப்எஸ் நிறுவனத்தை தணிக்கை செய்த நிறுவனங்கள் மற்றும் தணிக்கையாளர்களிடம் தணிக்கை தொடர்பான ஆவணங்களை அளிக்குமாறு தேசிய நிதி ஆய்வறிக்கை ஆணையம் (என்எப்ஆர்ஏ) கேட்டுள்ளது.

இந்த ஆணையம் நிறுவன விவகாரங்கள் துறை அமைச்சகத்தின் ஒரு அங்கமாகும். நிறுவனங்களில் நடைபெறும் நிதி முறைகேடுகளை விசாரிக்க இந்த அமைப்பு சமீபத்தில் உருவாக்கப்பட்டது. இந்த அமைப்பு தற்போது ஐஎல் & எஃப்எஸ் நிறுவனம் மற்றும் ஐஎல் & எஃப்எஸ் நிதி சேவை நிறுவனம், ஐஎல்&எஃப்எஸ் டிரான்ஸ்போர்டேஷன் நெட்வொர்க்ஸ் உள்ளிட்ட நிறுவனங்களை தணிக்கை செய்த நிறுவனங்களிடம் அது தொடர்பான ஆவணங்களைத் தருமாறு கேட்டுள்ளது.

டிலாய்ட் ஹஸ்கின்ஸ் செல்ஸ், பிஎஸ்ஆர் அண்ட் கோ, எஸ்ஆர்பிசி அண்ட் கோ உள்ளிட்ட 3 பெரிய நிறுவனங்களிடம் ஆவணங்களை கேட்டுள்ளது. அதேபோல 40 தணிக்கையாளர்களிடமும் ஆவணங்களை தாக்கல் செய்யுமாறு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

ஆவணங்கள் அனைத்தும் காகித வடிவில் கோரப்பட்டுள்ளது. சில நிறுவனங்கள் ஆன்லைன் மூலமாக தணிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்கின்றன. அத்தகைய நிறுவனங்களின் தலைவர்களை தங்கள் அலுவலகத்துக்கு அழைத்துள்ளது என்எப்ஆர்ஏ. இவர்கள் கிளவுட் தளத்துக்கு சென்று தாங்கள் நடத்திய தணிக்கை விவரங்களை விளக்க வேண்டும்.

தணிக்கை விவரங்களை தாக்கல் செய்வது குறித்து அனுப்பிய நோட்டீஸுக்கு எர்னஸ்ட் அண்ட் யங் மற்றும் டிலாய்ட் நிறுவனங்கள் எவ்வித பதிலும் அனுப்பவில்லை.

என்எப்ஆர்ஏ அமைப்புக்கு விசாரணை நடத்துவதோடு தவறு செய்த நிறுவனங்களுக்கு 10 ஆண்டுகள் தடை மற்றும் அபராதம் விதிக்கும் அதிகாரமும் வழங்கப்பட்டுள்ளது.

சிறிய தணிக்கையாளர்களும் விசாரணைக்கு உட்படுத்தப்படுவது இதுவே முதல் முறையாகும். மேலும் ஐஎல் & எஃப்எஸ் நிறுவன உயர் அதிகாரிகளுடன் தணிக்கையாளர்கள் நடத்திய விவரங்களையும் கோருகிறது என்எப்ஆர்ஏ.

Advt:

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close