[X] Close

கல்வி, வேலைவாய்ப்புக்கு முன்னுரிமை: மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் உறுதி


  • kamadenu
  • Posted: 15 Jun, 2019 08:55 am
  • அ+ அ-

பட்ஜெட்டுக்கு முந்தைய ஆலோசனைக் கூட்டத்தில் நேற்று சமூக ஆர்வலர்கள், சுகாதாரத்துறையைச் சேர்ந்தவர்களின் கருத்துகளை மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் கேட்டறிந்தார்.

அவர்களிடையே பேசிய அமைச்சர் கல்வித் தரத்தை உயர்த்துவதன் மூலம் சர்வதேச அளவிலான போட்டிகளை சந்திக்கும் திறன்மிக்க மாணவர் சமுதாயம் உருவாகும். வேலை வாய்ப்பு உருவாக்கத்துக்கு புதிய தொழில்களை ஊக்குவிக்க வேண்டிய அவசியம் உள்ளது. அதேசமயம் வேலை இல்லாத் திண்டாட்டத்தை போக்க வேண்டிய கடமையும் அரசுக்கு உள்ளது. இவை அனைத்துக்கும் அரசு முன்னுரிமை அளிக்கும்.

நோயற்ற சமுதாயத்தை உருவாக்குவதற்கு சுகாதாரத்துறைக்கு கூடுதல் நிதி ஒதுக்கவும் அரசு தயங்காது என்றார். மேலும் ஒருங்கிணைந்த வளர்ச்சியை எட்ட வேண்டுமெனில் பெண்களுக்கு அதிகாரம், பெண் தொழில் முனைவோர் உருவாக்கம் ஆகியன ஒருங்கிணைந்த சமூக வளர்ச்சிக்கு அடித்தளமிடும். எனவே இவற்றில் அரசு தீவிர கவனம் செலுத்தும் என்றார்.

Advt:

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close