[X] Close

பாரத ஸ்டேட் வங்கிக்கு அரசின் மூலதனம் தேவைப்படாது: தலைவர் ரஜ்னீஷ் குமார் கருத்து


  • kamadenu
  • Posted: 14 Jun, 2019 08:18 am
  • அ+ அ-

பாரத ஸ்டேட் வங்கிக்கு மத்திய அரசின் மூலதனம் தேவைப்படாது என்று வங்கியின் தலைவர் ரஜ்னீஷ் குமார் தெரிவித்துள்ளார்.

பட்ஜெட்டுக்கு முந்தைய நிதி அமைச்சரின் ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்ற பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அவர் இக்கருத்தை தெரிவித்தார். இந்தக் கூட்டத்தில் பொதுத்துறை வங்கிகளுக்கு அரசின் மூலதன தேவை குறித்து விவாதிக்கப்பட்டது என்றும் குறிப்பிட்டார்.

கடந்த மார்ச் மாதம் எஸ்பிஐ கடன் பத்திர வெளியீடு மூலம் ரூ.1,251 கோடி திரட்டியது. ரூ.20 ஆயிரம் கோடி திரட்டுவதற்கான இலக்கை அடுத்த ஆண்டு மார்ச் வரை இயக்குநர் குழு நீட்டித்துள்ளது என்றும் அவர் குறிப்பிட்டார்.

2018-19-ம் நிதி ஆண்டில் பொதுத்துறை வங்கிகளின் நிதி நிலை மேம்பட அரசு ரூ.1.6 லட்சம் கோடி முதலீடு செய்தது. கடந்த பிப்ரவரியில் தாக்கல் செய்யப்பட்ட இடைக்கால பட்ஜெட்டில் வங்கிகளுக்கான மறு முதலீட்டுக்கு எவ்வித நிதியும் ஒதுக்கப்படவில்லை. கடந்த நிதி ஆண்டில் ஒதுக்கப்பட்ட ரூ.48,239 கோடி தொகையை அளிக்க கடந்த பிப்ரவரி மாதம் அனுமதி அளிக்கப்பட்டது.

பாரத ஸ்டேட் வங்கியின் நிதிநிலை அறிக்கையில் என்பிஏ-வுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டு நான்காம் காலாண்டிலிருந்து லாபம் ஈட்டத் தொடங்கியுள்ளது என்றும் ரஜ்னீஷ் குமார் கூறினார்.

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close