[X] Close

ஆஸ்திரேலியாவில் நிலக்கரி சுரங்கம் அமைக்க அதானி என்டர்பிரைசஸ் நிறுவனத்துக்கு அனுமதி


  • kamadenu
  • Posted: 14 Jun, 2019 08:17 am
  • அ+ அ-

ஆஸ்திரேலியாவில் உள்ள குயீன்ஸ்லாந்து மாகாணத்தில் நிலக்கரி சுரங்கம் அமைப்பதற்கான அனுமதி அதானி என்டர்பிரைசஸ் நிறுவனத்துக்கு வழங்கப்பட்டுள்ளது. நீண்டகாலமாக நிலுவையில் இருந்த இந்தத் திட்டத்துக்கு நேற்று அனுமதி வழங்கப்பட்டு அதற்கான கடிதத்தை அரசு வழங்கியுள்ளதாக அதானி நிறுவனம் தெரிவித்துள்ளது.

இத்திட்டத்துக்கான அனுமதியை குயீன்ஸ்லாந்து மாகாணஅரசு அளித்துள்ளது. இத்திட்டத்தால் நிலத்தடி நீர் பாதிக்கப்படும் என்றும், நிலக்கரி சுரங்கம் அமைவதால் சுற்றுச்சூழல் பாதிக்கப்படும் என்றும் இத்திட்டத்துக்கு ஒப்புதல் வழங்கப்படவில்லை. கார்மிகேல் சுரங்கத்துக்கான அனுமதிவழங்கப்பட்ட அடுத்த நிமிடமேஇதற்கான பணிகள் தொடங்கப்படும் என்று அதானி குழுமத் தலைவர் கவுதம் அதானி தெரிவித்துள்ளார்.

இந்த நிலக்கரி சுரங்கத் திட்டத்தை செயல்படுத்துவதில் நிலத்தடி நீர் நிர்வாக நடைமுறைகள் குறித்து அதானி குழுமம் தெரிவித்தசுற்றுச்சூழல் காப்பு திட்ட நடவடிக்கைகளுக்கு ஒப்புதல் அளிப்பதாக குயீன்ஸ்லாந்து சுற்றுச்சூழல் மற்றும் அறிவியல் நிர்வாகத்துறை தெரிவித்துள்ளது.

இந்தச் சுரங்கத்திலிருந்து ஆண்டுக்கு 80 லட்சம் டன் முதல் ஒரு கோடி டன் வரை நிலக்கரி கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்தசுரங்கத்திலிருந்து அடுத்த இரண்டு ஆண்டுகளில் நிலக்கரி வெட்டியெடுக்கப்பட்டு விடும் என்று அதானி சுரங்கப் பிரிவின் தலைமை நிர்வாகி லூகஸ் டோவ் தெரிவித்துள்ளார். சுரங்க திட்டப் பணி மற்றும் அங்கிருந்து நிலக்கரியை எடுத்து வருவதற்கு ரயில் பாதை அமைப்பது உள்ளிட்டவற்றுக்கு இரண்டு ஆண்டுகள் ஆகும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இத்திட்டத்துக்கு அனுமதி அளிக்கப்பட்டதால் மேலும் பல அனல் மின் நிலையங்கள் உருவாக வழியேற்பட்டுள்ளது.

நிலக்கரி சுரங்கத்திலிருந்து துறைமுகத்துக்கு ரயில் பாதை 320 கி.மீ. தூரத்துக்கு அமைக்கப்பட வேண்டும்.

இத்திட்டத்துக்கு அனுமதி அளிக்கப்பட்டது மிகவும் வருத்தமளிப்பதாகவும், தொடர்ந்து இத்திட்டத்தை எதிர்த்து போராடப்போவதாகவும் தன்னார்வ அமைப்பினர் கருத்து தெரிவித்துள்ளனர். ஆஸ்திரேலியாவின் மிக நீண்ட கடல் வாழ் பாதுகாப்பு இத்திட்டத்தால் பாதிக்கப்படும் என்று அந்நாட்டு தன்னார்வ அமைப்பு தெரிவித்துள்ளது.

மறைமுக வேலைவாய்ப்பு

சுரங்கத்தை சுற்றி தடுப்பு வேலிஅமைப்பது, பாலம், சாலை வசதி ஏற்படுத்துவது உள்ளிட்டபணிகளை உடனே தொடங்கப்போவதாக அதானி நிறுவனம் தெரிவித்துள்ளது. இப்பணி மூலம் 1,500 பேருக்கு நேரடி வேலை வாய்ப்பும், 6,750 பேருக்கு மறைமுக வேலை வாய்ப்பும் கிடைக்கும். 2010-ம் ஆண்டு கார்மிகேல் சுரங்கத்தை அதானி குழுமம் வாங்கியது. இந்த சுரங்கத்துக்கு அருகே அதாவது 320 கி.மீ. தொலைவில் அபோட் பாயின்ட் துறைமுகம் உள்ளது. சுரங்கப் பகுதியில் கட்டிடம், ரயில் பாதை வசதி, சாலை வசதி,பாலம் கட்டுவது போன்ற பணிகளுக்கு ரூ.10 ஆயிரம் கோடி செலவாகும் என மதிப்பிடப்பட்டுள்ளது.

அதானி என்டர்பிரைசஸ் நிறுவனம் கடந்த ஆண்டு வெளியிட்ட ஆண்டறிக்கையில் ஆஸ்திரேலியாவில் நிலக்கரி உற்பத்தி 2021-ல் தொடங்கப்படும் என தெரிவித்திருந்தது. தற்போது அனுமதி கிடைத்துள்ள நிலையில் 2021-ம் ஆண்டில் அங்கிருந்து நிலக்கரி இந்தியாவுக்கு கிடைக்கும் என்பது உறுதியாகியுள்ளது.

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close