[X] Close

யெஸ் வங்கி பங்குகள் சரிவு


  • kamadenu
  • Posted: 14 Jun, 2019 08:18 am
  • அ+ அ-

தனியார் வங்கிகளுள் ஒன்றான யெஸ் வங்கியின் பங்குகள் நேற்று பங்குச் சந்தையில் பெரும் சரிவைச் சந்தித்தன. கடந்த நான்கு ஆண்டுகளில் முன்னெப்போதும் இல்லாதஅளவாக 10.43 சதவீத அளவுக்கு பங்கு விலைகள் சரிந்தன. வர்த்தகம் முடிவில் ரூ. 120.70 என்ற விலையில் வர்த்தகமாயின. 2015-ம் ஆண்டு ஆகஸ்ட் 24-ம் தேதிக்குப் பிறகு தற்போதுதான் யெஸ் வங்கிப் பங்குகள் இந்த அளவுக்கு சரிவைச் சந்தித்துள்ளன.

சர்வதேச சந்தை பகுப்பாய்வு நிறுவனமான யுபிஎஸ், அடுத்த கட்ட நெருக்கடி வங்கிகளுக்கு ஏற்படும் என எச்சரித்துள்ளது. அதாவது பெரிய நிறுவனங்களுக்கு கடன் அளித்துள்ள வங்கிகள் இத்தகைய நெருக்கடியை சந்திக்கும் என குறிப்பிட்டிருந்தது. இந்நிறுவனம் மொத்தம் 5,600 நிறுவனங்களின் நிதி நிலையை மதிப்பீடு செய்தது. அதில் 200 பெரிய நிறுவனங்கள் வங்கிகளுக்கு செலுத்த வேண்டிய கடன் தொகை 25,000 கோடிடாலராகும். இதனால் யெஸ் வங்கி, இண்டஸ்ட் இந்த் வங்கிஆகியவற்றுக்கு பெரும் பாதிப்புஏற்படலாம் என எச்சரித்திருந்தது. இதையடுத்து இவ்விரு வங்கிகளின் பங்குகளும் தொடர்ந்து சரிவைச் சந்தித்து வருகின்றன.

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close