[X] Close

4-வது முறையாக நீரவ் மோடிக்கு ஜாமீன் மறுப்பு


4

  • kamadenu
  • Posted: 13 Jun, 2019 08:22 am
  • அ+ அ-

பஞ்சாப் நேஷனல் வங்கியில் மோசடி செய்து லண்டனுக்கு தப்பி ஓடிய வைர வியாபாரி நீரவ் மோடிக்கு ஜாமீன் வழங்க லண்டன் நீதிமன்றம் மறுத்துவிட்டது. நான்காவது முறையாக அவருக்கு ஜாமீன் மறுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

பஞ்சாப் நேஷனல் வங்கியில் ரூ.14 ஆயிரம் கோடி மோசடி செய்த வழக்கு தொடர்பாக தேடப்படும் குற்றவாளியாக இந்திய அரசால் நீரவ் மோடி அறிவிக்கப்பட்டுள்ளார். கடந்த மார்ச் 19-ம் தேதி நீரவ் மோடி, லண்டனில் ஸ்காட்லாந்து போலீஸாரால் கைது செய்யப்பட்டார். அவரை இந்தியாவுக்கு அனுப்ப வேண்டும் என்று மத்திய புலனாய்வு அமைப்பு (சிபிஐ) லண்டன் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளது.

லண்டன் சிறையில்..

லண்டனின் தென்மேற்கு பகுதியில் உள்ள வான்ட்ஸ்வொர்த் சிறையில் நீரவ் மோடி அடைக்கப்பட்டுள்ளார்.

நீரவ் மோடியை இந்தியாவுக்கு அனுப்பினால் அவர் எந்த சிறையில் அடைக்கப்படுவார் என இந்திய அதிகாரிகளிடம் லண்டன் நீதிமன்றம் கேள்வியெழுப்பியுள்ளது.

அதேபோல நீரவ் மோடி அடைக்கப்பட உள்ள சிறை விவரங்கள் இந்திய அதிகாரிகளால் அனுப்பப்படும் என்று தெரிகிறது. ஆர்தர் ரோடு சிறைச்சாலையில் அறை எண் 12 நீரவ் மோடிக்காக தயார் செய்யப்பட்டு வருகிறது.

நீரவ் மோடி அடைக்கப்படும் சிறை அறையில் மூன்று பேருக்கு மேல் அடைக்கப்பட மாட்டார்கள் என்ற உத்தரவாதமும் சிறைத்துறையினரால் லண்டன் நீதிமன்றத்தில் உறுதிமொழியாக அளிக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close