[X] Close

‘ இந்தியாவின் வளர்ச்சி தவறாக கணிக்கப்பட்டுள்ளது’


  • kamadenu
  • Posted: 13 Jun, 2019 08:18 am
  • அ+ அ-

இந்தியாவின் வளர்ச்சி வீதம் 2011 மற்றும் 2017 நிதி ஆண்டுகளில் தவறாக கணிக்கப்பட்டுள்ளதாக முன்னாள் பொருளாதார ஆலோசகர் அரவிந்த் சுப்பிரணியன் கூறியுள்ளார்.

2011-12 மற்றும் 2016-17ம் நிதி ஆண்டில் மொத்த உள்நாட்டு உற்பத்தியை கணிக்கும் முறைகளில் மாற்றம் கொண்டுவரப்பட்டது. அதன் விளைவால் வளர்ச்சி வீதம் நடைமுறையில் இருந்ததை விட 2.5 சதவீதம் உயர்த்திக் கூறப்பட்டிருக்கிறது என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

முறையான கணிப்பின்படி, இந்த இரு நிதி ஆண்டுகளிலும் வளர்ச்சி வீதம் 4.5 சதவீத அளவில்தான் இருந்திருக்க வேண்டும். ஆனால் கணிப்பு முறையில் மாற்றம் கொண்டுவரப்பட்டதால் இவ்விரு நிதி ஆண்டுகளில் வளர்ச்சி வீதம் 7 சதவீதம் எனக் கணக்கிடப்பட்டுள்ளது.

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close