[X] Close

வங்கிகளில் 11 ஆண்டுகளில் ரூ. 2 லட்சம் கோடி மோசடி: ஐசிஐசிஐ, எஸ்பிஐ, ஹெச்டிஎப்சி வங்கிகள் முன்னிலை


11-2

  • kamadenu
  • Posted: 13 Jun, 2019 08:17 am
  • அ+ அ-

கடந்த 11 ஆண்டுகளில் வங்கிகளில் மட்டும் 50 ஆயிரத்துக்கும் மேலான மோசடிகள் நிகழ்ந்துள்ளன. இவற்றில் ஐசிஐசிஐ வங்கி, பாரத ஸ்டேட் வங்கி (எஸ்பிஐ), ஹெச்டிஎப்சி வங்கிகளில் அதிக அளவில் மோசடிகள் நிகழ்ந்துள்ளதாக ரிசர்வ் வங்கி வெளியிட்ட புள்ளிவிவரம் தெரிவிக்கிறது.

2008-09 நிதி ஆண்டு முதல் 2018-19 நிதி ஆண்டு வரையான காலத்தில் மொத்தம் 53,334 மோசடிகள் பதிவாகியுள்ளன. இவற்றால் வங்கிகளுக்கு ஏற்பட்ட இழப்பு ரூ.2.05 லட்சம் கோடியாகும். இதில் ஐசிஐசிஐ வங்கியில் மட்டும் 6,811 வழக்குகள் பதிவாகியுள்ளன. இதனால் அந்த வங்கிக்கு ஏற்பட்ட இழப்பு ரூ.5,033 கோடியாகும்.

பொதுத்துறை வங்கியான பாரத ஸ்டேட் வங்கியில் மொத்தம் 6,793 மோசடிகள் நிகழ்ந்துள்ளன. இதில் ரூ.23,734 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது. ஹெச்டிஎப்சியில் நிகழ்ந்த 2,497 மோசடி வழக்குகளில் ரூ.1,200 கோடி நஷ்டம் ஏற்பட்டுள்ளது. பாங்க் ஆப் பரோடாவில் நிகழ்ந்த 2,160 மோசடி வழக்குகளில் ரூ.12,962 கோடி நஷ்டம் ஏற்பட்டுள்ளது. பஞ்சாப் நேஷனல் வங்கியில் 2,047 வழக்குகளால் ரூ.28,700 கோடியும், ஆக்ஸிஸ் வங்கியில் 1,944 வழக்குகளால் ரூ.5,301 கோடியும் நஷ்டம் ஏற்பட்டுள்ளது.

இதேபோல பாங்க் ஆப் இந்தியாவில் 1,872 வழக்குகளால் ரூ.12,358 கோடியும், சிண்டிகேட் வங்கியில் 1,783 வழக்குகளால் ரூ.5,830 கோடியும், சென்ட்ரல் பாங்க் ஆப் இந்தியாவில் 1,613 வழக்குகளால் ரூ.9,041 கோடியும் நஷ்டம் ஏற்பட்டுள்ளது.

ஐடிபிஐ வங்கியில் மொத்தம் 1,264 மோசடி வழக்குகள் பதிவாகியுள்ளன. இதில் ரூ.5,978 கோடி நஷ்டம் ஏற்பட்டுள்ளது. ஸ்டாண்டர்டு சார்ட்டர்டு வங்கியில் 1,263 வழக்குகளில் ரூ.1,221 கோடி நஷ்டமும், கனரா வங்கியில் 1,254 வழக்குகளில் ரூ.5,553 கோடியும். யூனியன் பாங்க் ஆப் இந்தியாவில் 1,244 வழக்குகளில் ரூ.11,830 கோடியும். கோடக் மஹிந்திரா வங்கியில் 1,213 வழக்குகளில் ரூ. 430 கோடியும் நஷ்டம் ஏற்பட்டுள்ளது.

இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் 1,115 வழக்குகளில் ரூ.12,644 கோடியும், ஓரியண்டல் பேங்க் ஆப் காமர்ஸ் வங்கியில் 1,040 வழக்குகளில் ரூ.5,598 கோடியும் நஷ்டம் ஏற்பட்டுள்ளது.

யுனைடெட் பாங்க ஆப் இந்தியாவில் 944 வழக்குகளில் ரூ.3,052 கோடியும், ஸ்டேட் பாங்க் ஆப் மைசூருவில் 395 வழக்குகளில் ரூ.742 கோடியும், ஸ்டேட் பாங்க் ஆப் பாட்டியாலாவில் 386 வழக்குகளில் ரூ.1,178 கோடியும், பஞ்சாப் அண்ட் சந்த் வங்கியில் 276 வழக்குகளில் ரூ.1,154 கோடியும், யூகோ வங்கியில் 1,081 வழக்குகளில் ரூ.7,104 கோடியும், தமிழ்நாடு மெர்கண்டைல் வங்கியில் 261 வழக்குகளில் ரூ.493 கோடியும், லட்சுமி விலாஸ் வங்கியில் 259 வழக்குகளில் ரூ.862 கோடியும் நஷ்டம் ஏற்பட்டுள்ளது.

இந்தியாவில் செயல்படும் சில வெளிநாட்டு வங்கிகளிலும் மோசடிகள் நிகழ்ந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

அமெரிக்கன் எக்ஸ்பிரஸ் வங்கியில் 1,862 வழக்குகளில் ரூ.86 கோடியும், சிட்டி வங்கியில் 1,764 வழக்குகளில் ரூ.578 கோடியும், ஹெச்எஸ்பிசி வங்கியில் 1,173 வழக்குகளில் ரூ.312 கோடியும், ராயல் பேங்க் ஆப் ஸ்காட்லாந்துவில் 216 வழக்குகளில் ரூ.12 கோடியும் நஷ்டம் ஏற்பட்டுள்ளது.

ஸ்டேட் பாங்க் ஆப் திருவாங்கூரில் 274 வழக்குகளில் ரூ.694 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது. ஜம்மு காஷ்மீர் வங்கியில் 142 வழக்குகளில் ரூ.1,639 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது. ஐஎப்சி வங்கியில் நிகழ்ந்த 9 மோசடிகளால் ரூ.671 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது. தனலட்சுமி வங்கியில் நிகழ்ந்த 89 மோசடிகளால் ரூ.410 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது. விஜயா வங்கியில் 639 வழக்குகளால் ரூ.1,748 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது.

யெஸ் வங்கியில் 102 மோசடி வழக்குகளால் ரூ.311 கோடியும், பேடிஎம் பேமென்ட் வங்கியில் 2 வழக்குகளில் ரூ.0.02 கோடியும் நஷ்டம் ஏற்பட்டுள்ளது.

வாக்களிக்கலாம் வாங்க

'கேம் ஓவர் ' உங்கள் ஸ்டார் ரேட்டிங் என்ன?

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close