[X] Close

சந்தை மதிப்பில் ஐபிஎம் நிறுவனத்தை மிஞ்சியது டாடா கன்சல்டன்ஸி சர்வீசஸ்


  • kamadenu
  • Posted: 12 Jun, 2019 09:46 am
  • அ+ அ-

தகவல் தொழில்நுட்ப நிறுவன மான டாடா கன்சல்டன்ஸி சர்வீசஸ் (டிசிஎஸ்) நிறுவனத்தின் சந்தை மதிப்பு நியூயார்க் பங்குச் சந்தை யில் ஐபிஎம் நிறுவன சந்தை மதிப்பை மிஞ்சியது.

கடந்த திங்கள் கிழமை வர்த்தகம் முடிவில் டிசி எஸ் சந்தை மதிப்பு 12,005 கோடி டாலர் (ரூ.8.37 லட்சம் கோடி) என்ற அளவுக்கு உயர்ந்தது. ஐபிஎம் சந்தை மதிப்பு 11,960 கோடி டாலர் (ரூ. 8.32 லட்சம் கோடி) என்ற அளவுக்கு பின்தங்கியது.

அன்றைய தினமே மும்பை பங்குச் சந்தையில் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் (ரூ. 8.36 லட்சம் கோடி) மதிப்பை விட கூடுதல் மதிப்பை எட்டியது டிசிஎஸ்.

2019-ம் நிதி ஆண்டில் டிசிஎஸ் நிறுவனத்தின் லாபம் 450 கோடி டாலராகும். நிகர வருமானம் 2,100 கோடி டாலராகும். ஐபிஎம் நிறுவனத்தின் லாபம் 870 கோடி டாலராகவும், வருமானம் 7,906 கோடி டாலராக இருந்தது.

டாடா சன்ஸ் அங்கமாக 1968-ம் ஆண்டு உருவாக்கப்பட்டது டிசிஎஸ். கடந்த சில ஆண்டுகளாக குழும நிறுவனங்களில் அதிக லாபம் ஈட்டும் நிறுவனமாக இது திகழ்கிறது.

ஐபிஎம் நிறுவனம் 1950-களில் இந்தியாவில் நுழைந்தது. ஆனால் 1970-களில் இந்தியாவிலிருந்து வெளியேறியது. பிறகு டாடா குழுமத்துடன் கூட்டு சேர்ந்து 1992-ல் இந்தியாவில் நுழைந்தது. பிறகு 1997-ல் கூட்டணியை முறித்து தனியாக செயல்பட்டு வருகிறது.

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close