[X] Close

பட்ஜெட்டுக்கு முந்தைய ஆலோசனை கூட்டம்; விவசாயம், கிராமப்புற மேம்பாட்டுக்கு முன்னுரிமை


  • kamadenu
  • Posted: 12 Jun, 2019 09:41 am
  • அ+ அ-

மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் பட்ஜெட்டுக்கு முந்தைய ஆலோசனை கூட்டத்தை நேற்று தொடங்கினார். தனது முதலாவது கூட்டத்தில் வேளாண் துறையைச் சேர்ந்த பிரதிநிதிகள் மற்றும் கிராமப் புற மேம்பாட்டுத் துறையைச் சேர்ந்தவர்களுடன் அவர் விரிவாக ஆலோசனை நடத்தினார்.

இந்தக் கூட்டத்தில் பேசிய நிர்மலா சீதாராமன், பொருளாதார வளர்ச்சியை ஊக்குவிப்பதோடு கிராமப்புறங்களில் சமூக கட்ட மைப்பு வசதிகளை மேம்படுத்து வதன் மூலம் வேலையில்லா திண்டாட்டத்தை ஒழிக்க முடியும் என்றார்.

அத்துடன் இத்தகைய நடவடிக் கைகள் மூலம் வறுமையை ஒழிக்க முடியும், இதற்கு வேளாண் மற்றும் அது சார்ந்த துறைகள் ஊக்கு விக்கப்பட வேண்டும் என்றார். குறிப்பாக வேளாண் அல்லாத பிற துறைகளையும் ஊக்குவிப்பது கிராமப்பொருளாதார வளர்சிக்கு வழிவகுக்கும் என்றார். வேளாண் துறைக்கு முன்னுரிமை அளிப்பதே பாஜக அரசின் பிரதான நோக்கம் என்றும் அவர் குறிப்பிட்டார்.

பல்வேறு பிராந்தியங்களி லிருந்து வந்திருந்த பிரதிநிதிகளி டம் இக்கருத்தை அவர் வலியுறுத் தினார். விவசாயம், மீன் வளத்துறை, கடல் சார் வளம் உள்ளிட்ட துறை களைச் சார்ந்த பிரதிநிதிகளுடனும் அவர் விவாதித்தார்.

வேளாண் துறையிலும் ஸ்டார்ட் அப்-கள் உருவாவதன் மூலம் சந்தை வாய்ப்புகள் விவசாயத்துறைக்கு பெருகும் மேலும் வேளாண் பொருள்கள் நுகர்வோரிடம் எளி தில் சென்றடையும். இதற்கென உரு வாகும் ஸ்டார்ட் அப்கள் ஊக்கு விக்கப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.

சேவைத் துறை, கிராமப்புற மேம்பாடு, வேளாண் அல்லாத பிற துறைகள், தோட்டக்கலைத்துறை, உணவு பதனிடல், கால்நடை வளர்ப்பு, மீனளம் மற்றும் விவசாயத் தில் ஸ்டார்ட் அப் குறித்தும் அவர் ஆலோசனை நடத்தினார்.

இந்தக் கூட்டத்தில் மத்திய நிதித்துறை இணையமைச்சர் அனு ராக் தாகுர், நிதி ஆயோக் உறுப் பினர் ரமேஷ் சந்திரா, நிதி செயலர் சுபாஷ் சந்திர கார்க், செலவுகள் துறை செயலர் கிரிஷ் சந்திர முர்மு, வருவாய்த்துறைச் செயலர் அஜய் நாராயண் பாண்டே உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

இந்தக் கூட்டத்தில் வேளாண் துறை பிரதிநிதிகள் தங்கள் துறை வளர்ச்சிக்கு மேற்கொள்ள வேண் டிய நடவடிக்கைகள் குறித்த பல் வேறு கருத்துகளை அமைச்சரிடம் கூறினர். சூரிய மின்னுற்பத்தி திட்டம் விவசாயிகளுக்கு வருமானம் தரும் திட்டமாக இருக்கும் என்ற ஆலோசனையும் இக்கூட்டத்தில் வழங்கப்பட்டது.

உரமில்லா விவசாயத்தை ஊக்கு விப்பது, ஜிஎஸ்டி பிரச்சினைகளை நீக்குவது, வேளாண் பதனிடும் அமைப்புகளுக்கு வரிச் சலுகை, வேளாண் ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்தி மையங்களுக்கான முதலீடுகளை அதிகரிப்பது, நுண்நீர் பாசனம், சூரிய ஆற்றல் மோட்டார் பம்ப், வேளாண் சந்தை சீர்திருத்தம், கைத்தறி துறை மேம்பாடு உள்ளிட்ட விஷயங்களும் இக்கூட்டத்தில் விவாதிக்கப்பட்டன.

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close