[X] Close

கார் உற்பத்தியை குறைத்தது மாருதி


  • kamadenu
  • Posted: 11 Jun, 2019 07:46 am
  • அ+ அ-

கார் உற்பத்தியில் முதலிடத்தில் உள்ள மாருதி சுஸுகி நிறுவனம் மே மாதம் தனது கார் உற்பத்தியை 18 சதவீதம் குறைத்துள்ளது. கார் விற்பனை தொடர்ந்து சரிந்து வருவதைக் கருத்தில் கொண்டு இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாக பங்குச் சந்தைக்கு அனுப்பிய கடிதத்தில் மாருதி சுஸுகி தெரிவித்துள்ளது.

தொடர்ந்து நான்கு மாதங்களாக கார் உற்பத்தியை மாருதி நிறுவனம் குறைத்து வருகிறது. மே மாதத்தில் மொத்தம் 1,51,188 கார்களை இந்நிறுவனம் உற்பத்தி செய்துள்ளது. வழக்கமான உற்பத்தி அளவு 1,84,612 கார்களாகும். இதைவிட 18.1 சதவீதம் குறைவாக உற்பத்தி செய்யப்பட்டுள்ளது.

மாருதி நிறுவனத் தயாரிப்புகளில் அதிகம் விற்பனையாவது அந்நிறுவனத்தின் சிறிய ரகக் கார்களான ஆல்டோ, ஸ்விப்ஃட், டிசையர் மாடல் கார்களாகும். இதன் உற்பத்தியையும் 42 சதவீதம் வரை குறைத்துள்ளதாக நிறுவனம் தெரிவித்துள்ளது.

கடந்த வாரம் மஹிந்திரா அண்ட் மஹிந்திரா நிறுவனம் தனது அனைத்து கார் உற்பத்தி நிறுவனங்களும் 13 நாள்களுக்கு உற்பத்தியை முற்றிலும் நிறுத்தப் போவதாக அறிவித்தது.

கடந்த மாதத்தில் ஒட்டுமொத்தமாக கார் விற்பனை 17 சதவீதம் வரை குறைந்துள்ளது.

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close