[X] Close

வங்கிக் கணக்கில் நேரடி மானியம்; ஒரு ஆண்டில் அரசுக்கு ரூ.51,700 கோடி மிச்சம்: 4.23 கோடி போலி எல்பிஜி இணைப்புகள் நீக்கம்


51-700-4-23

  • kamadenu
  • Posted: 11 Jun, 2019 07:37 am
  • அ+ அ-

மானியத் தொகையை பயனாளிகளின் வங்கிக் கணக்கில் நேரடியாக அனுப்பியதன் மூலம் அரசுக்கு கடந்த நிதி ஆண்டில் ரூ.51,700 கோடி மிச்சமாகியுள்ளது.

 2014-ம் ஆண்டிலிருந்து இந்தத் திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது. 2014-ம் ஆண்டிலிருந்து 2018-ம் ஆண்டு வரையான காலத்தில் அரசுக்கு மிச்சமான தொகை ரூ.90 ஆயிரம் கோடியாகும். இதில் பாதி அளவுக்கும் மேலான தொகை கடந்த நிதி ஆண்டில் (ரூ.51,664.85 கோடி) மிச்சமாகியுள்ளது என அரசு தெரிவித்துள்ளது.

இத்திட்டத்தை செயல்படுத்தியதன் மூலம் சுமார் 4.23 கோடி போலி இணைப்புகள் நீக்கப்பட்டுள்ளன. இதேபோல 2.98 கோடி ரேஷன் கார்டுகள் போலியாக இருப்பது கண்டுபிடிக்கப்பட்டு அவையும் நீக்கப்பட்டுள்ளன.

தேசிய சமூக உதவித் திட்டத்தின் கீழ் பயன்பெறும் போலி பயனாளிகள் அடையாளம் காணப்பட்டு அவர்களின் பெயர்களும் நீக்கப்பட்டுள்ளன. அந்த வகையில் மொத்தம் 4.77 கோடி பயனாளிகள் போலியாக பட்டியலில் இடம்பெற்றிருந்தது கண்டுபிடிக்கப்பட்டு நீக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் தேசிய வேலை உறுதி திட்டத்தின் கீழ் பயன்பெறும் போலி பயனாளிகளின் பெயர்கள் நீக்கப்பட்டு கணிசமான தொகை மிச்சப்படுத்தப்பட்டுள்ளது.

இதேபோல விவசாயிகளுக்கு உர மானியத்தை நேரடியாக அளிக்கும் திட்டமும் செயல்படுத்தப்படுகிறது. இதன் மூலம் மிகப் பெரும் தொகை அரசுக்கு மிச்சமாகியிருக்கும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

கடந்த ஐந்து ஆண்டுகளில் ஒட்டுமொத்தமாக ரூ.1.41 லட்சம் கோடி அரசுக்கு மிச்சம் ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த ஐந்து ஆண்டுகளில் நேரடி பண பரிமாற்றம் மூலம் அரசு ரூ. 7.33 லட்சம் கோடியை வங்கிக் கணக்கில் அரசு போட்டுள்ளது. இதில் 2019-20-ம் ஆண்டுக்கு ரூ.30,338 கோடி பரிமாற்றம் செய்யப்பட்டுள்ளதாக அரசு வெளியிட்ட அறிக்கை தெரிவிக்கிறது.

அரசு மானியம் அளிக்கும் திட்டங்கள் மொத்தம் 439. இதில் எல்பிஜி மானியம், மகாத்மா காந்தி ஊரக வேலை உறுதித் திட்டம், ஆயுஷ்மான் பாரத் திட்டம், உர மானியம் ஆகியன மிக முக்கியமான திட்டங்களாகும். இவற்றுக்கு மிகப் பெருமளவிலான நிதி ஒதுக்கப்படுகிறது.

2018-19-ம் நிதி ஆண்டில் 59 கோடி பேர் அரசின் நேரடி பண பரிவர்த்தனை திட்டம் மூலம் பயனடைந்துள்ளனர்.

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close