[X] Close

செய்தி நிறுவனங்கள் நஷ்டத்தில் இருக்க கூகுள் செய்திகளின் வருமானம் ரூ.32,700 கோடி


32-700

  • kamadenu
  • Posted: 11 Jun, 2019 07:38 am
  • அ+ அ-

2018-ம் ஆண்டில் செய்தி நிறுவனங்கள் பலவும் நஷ்டத்தைச் சந்தித்துள்ள நிலையில் கூகுள் நிறுவனம் செய்திகள் மூலம் 4.7 பில்லியன் டாலர் (ரூ.32,700 கோடி) வருமானம் ஈட்டியுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

அமெரிக்காவைச் சேர்ந்த செய்தி நிறுவனங்கள் கூட்டமைப்பு (என்எம்ஏ) வெளியிட்டுள்ள அறிக்கையில் செய்தி நிறுவனங்களின் செய்திகள் தேடப்பட்டதன் மூலமும், கூகுள் செய்திகளின் மூலமும் கூகுள் நிறுவனம் ரூ.32,700 கோடி வருமானமாக ஈட்டியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்காவின் மொத்த செய்தி துறையின் வருவாய் 5.1 பில்லியன் டாலர். அதில் கூகுள் நிறுவனத்தின் பங்கு மட்டுமே 4.7 பில்லியன் டாலராகப் பதிவாகியுள்ளது என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதுகுறித்து என்எம்ஏ தலைவர் டேவிட் சாவெர்ன் கூறுகையில், “செய்தி நிறுவனங்களின் செய்திகள் கூகுள் தேடுபொறியில் வாசகர்களால் படிக்கப்படுவதன் மூலம் கூகுள் ஈட்டும் வருமானம் மிகவும் அதிகம். ஆனால் அதில் செய்தி நிறுவனங்களுக்கு என எந்த லாபமும் கிடைப்பதில்லை. செய்திகளை, கட்டுரைகளை எழுதும் பத்திரிகையாளர்களுக்கும் எந்த வெகுமதியும் இல்லை. செய்தி நிறுவனங்களுக்கும் தேடுபொறிகளுக்கும் இடையே உள்ள இந்த முரண்பாடு வருத்தமளிக்கிறது. இதனால் மிகப் பழமையான செய்தி நிறுவனங்கள் பெரிய இழப்பை சந்திப்பதோடு மூடும் நிலைக்கும் ஆளாகின்றன” என விமர்சித்துள்ளார்.

கூகுள் தேடுபொறியில் செய்யப்படும் மொத்த தேடலில் 40 சதவீதம் செய்திகள் பற்றியது என்ற தகவலையும் என்எம்ஏ குறிப்பிட்டுள்ளது.

வாக்களிக்கலாம் வாங்க

'கேம் ஓவர் ' உங்கள் ஸ்டார் ரேட்டிங் என்ன?

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close