[X] Close

கோடக் வங்கிக்கு ரூ.2 கோடி அபராதம்


2

  • kamadenu
  • Posted: 09 Jun, 2019 11:27 am
  • அ+ அ-

தனியார் வங்கியான கோடக் வங்கிக்கு ரூ.2 கோடி அபராதம் விதித்தது ரிசர்வ் வங்கி. ஆர்பிஐ வகுத்தளித்த விதிமுறைகளை பின்பற்றாததால் இந்த அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

கோடக் வங்கி நிறுவனர்கள், வங்கியில் தங்களுக்குள்ள பங்குகளின் அளவை படிப்படியாகக் குறைக்கவேண்டும் என்று ரிசர்வ் வங்கி உத்தரவிட்டிருந்தது. அதை கோடக் மஹிந்திரா வங்கி செயல்படுத்தாததால் அந்த வங்கியின் மீது ரூ.2 கோடி அபராதம் விதித்துள்ளது ரிசர்வ் வங்கி.

வங்கி நிறுவனர்கள் வைத்திருக்கும் பங்குகளின் அளவு கடந்த டிசம்பர் மாதத்துக்குள் 20 சதவீதம் முதல் 30 சதவீதத்துக்குள்ளும், மார்ச் 2020-க்குள் 15 சதவீதமாக குறைக்கப்பட வேண்டும் என்று ரிசர்வ் வங்கி உத்தரவிட்டிருந்தது. இதை எதிர்த்து கோடக் வங்கி, மும்பை உயர் நீதி மன்றத்தில் வழக்கு தாக்கல் செய்தது. அந்த வழக்கு அடுத்த வருடம் ஜனவரி மாதம் விசாரணைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close