[X] Close

பிட்காயின் பரிவர்த்தனை: 10 ஆண்டுகள் சிறை


10

  • kamadenu
  • Posted: 09 Jun, 2019 11:26 am
  • அ+ அ-

கிரிப்டோ கரன்சி, பிட் காயின் எனப்படும் மெய் நிகர் பணப்பரிவர்த்தனை மேற்கொள்வோருக்கு 10 ஆண்டு சிறை தண்டனை வழங்க வகை செய்யும் புதிய மசோதா தயாராகி வருகிறது..

மெய் நிகர் பணப்பரிவர்த்தனைகளில் முதன்மையானது பிட்காயின் தொழிநுட்பம். இந்த வகை பணப்பரிவத்தனை இந்தியாவில் தடை செய்யப்பட்டுள்ளது. கருப்புப் பண புழக்கம் மற்றும் பெருமளவு வரி ஏய்ப்புக்கு வாய்ப்பிருப்பதாகக் கருதப்படுகிறது. எனவே அவற்றின் செயல்பாட்டை முற்றிலும் தடைசெய்வது அவசியமாகிறது. இதைத் தடுப்பதற்கான முறைகள் குறித்து பொருளாதார நிபுணர்களுடன் தொடர்ந்து ஆலோசிக்கப்பட்டுவந்தது. இந்நிலையில் இனி இவ்வகையாக மெய்நிகர் பரிவர்த்தனை ஜாமீனில் வெளி வர முடியாத அளவுக்கு கடுமையான தண்டனை அளிக்கப்பட வேண்டும் என்று முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்த மசோதாவுக்கு பொருளாதார விவகாரத் துறை செயலர் சுபாஷ் சந்திர கார்க் இறுதி வடிவம் அளித்து வருகிறார். விரைவில் அமைச்சரவை ஒப்புதலுக்கு அனுப்பப்பட்டு மசோதாவாக நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்படும் என்று தெரிகிறது.

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close