[X] Close

சேவைத் துறையில் எப்டிஐ 37% உயர்வு


37

  • kamadenu
  • Posted: 06 Jun, 2019 09:57 am
  • அ+ அ-

முடிந்த நிதியாண்டில் இந்திய சேவைத் துறைகளில் செய்யப்பட்ட அந்நிய முதலீடு 36.5 சதவீதம் உயந்துள்ளதாக தொழில் மற்றும் உள்நாட்டு வர்த்தக மேம்பாட்டுத் துறை தெரிவித்துள்ளது.

தொழில் தொடங்குவதற்கான வழிமுறைகளை எளிமைப்படுத்துவதற்காகவும், அந்நிய முதலீடுகளை ஈர்ப்பதற்காகவும் இந்திய அரசு பல்வேறு சீர்திருத்தங்களை கொண்டுவந்திருக்கிறது. இதன் காரணமாக இந்தியத் தொழில்துறையில் அந்நிய முதலீடு அதிகரித்துள்ளது. 2018-19 நிதியாண்டில் மட்டும் சுமார் 9.15 பில்லியன் டாலர் அளவில் சேவைத் துறைகளில் அந்நிய முதலீடு செய்யப்பட்டுள்ளது. சென்ற நிதியாண்டில் இது 6.7 பில்லியன் டாலாராக இருந்தது.

சேவைத் துறை என்பது நிதித்துறை, வங்கி, காப்பீடு, கூரியர் சர்வீஸ், அவுட் சோர்ஸிங் போன்ற துறைகளை உள்ளடக்கியது ஆகும். நாட்டின் மொத்த உள்ளநாட்டு உற்பத்தியில் சேவைத் துறைகளில் செய்யப்படும் அந்நிய முதலீடு மட்டுமே 60 சதவீத பங்களிப்பை கொண்டிருக்கின்றன. இவை தவிர, கணினி, வர்த்தகம், வாகனத் தயாரிப்பு போன்றவை சம்பந்தப்பட்ட துறைகளும் போதுமான அளவு அந்நிய முதலீட்டை ஈட்டி இருக்கின்றன.

கடந்த ஆறு ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு தொலைத் தொடர்பு துறை மற்றும் மருந்து துறைகளில் அந்நிய முதலீடு குறைந்திருக்கிறது.

சேவைத் துறை வளர்ச்சி குறைவு முடிந்த பாராளுமன்றத் தேர்தலை ஒட்டிய காலங்களில் அந்நிய முதலீடுகள் குறையத் தொடங்கின. நாடு தற்போது பொருளாதார மந்த நிலையில் இருக்கிறது. அதன் விளைவாக மே மாத நிலவரத்தின்படி, சேவைத் துறைகளின் வளர்ச்சி கடந்த 12 மாதங்கள் இல்லாத அளவுக்கு குறைந்துள்ளது. நிறுவனக் கொள்முதல் குறியீடு ஏப்ரல் மாதம் 51 புள்ளிகளாக இருந்தது. தற்போது அது 50.2 ஆக குறைந்துள்ளது.

 

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close