[X] Close

ஜூன் 15-ல் மோடி தலைமையில் நிதி ஆயோக் கூட்டம்: நீர் மேலாண்மை, விவசாயம் குறித்து ஆலோசிக்க மாநில முதல்வர்களுக்கு அழைப்பு


15

  • kamadenu
  • Posted: 06 Jun, 2019 09:59 am
  • அ+ அ-

பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நிதி ஆயோக் அமைப்பின் 5-வது ஆட்சியாளர்கள் குழு சந்திப்பு வரும் ஜுன் 15-ம் தேதி நடக்க உள்ளது. இந்தச் சந்திப்பில் நாட்டின் மிக முக்கியப் பிரச்சினைகள் விவாதிக்கப்பட உள்ளதாகத் தகவல்கள் வெளியாகி உள்ளன.

அரசின் கொள்கைகள், திட்டமிடல்கள் மற்றும் அவற்றின் செயல்பாடுகள் போன்றவற்றை செயல்படுத்தும் முக்கிய அமைப்பு நிதி ஆயோக். பாஜக தலைமையிலான அரசினால் உருவாக்கப்பட்ட இந்த அமைப்பின் ஆட்சியாளர்கள் குழுவில் அனைத்து மாநில முதல்வர்கள், யூனியன் பிரதேசங்களின் துணை நிலை ஆளுநர்கள், பல்வேறு மத்திய அமைச்சர்கள் மற்றும் மூத்த அரசு அதிகாரிகள் ஆகியோர் இருப்பர். இந்தக் குழு வரும் ஜூன் 15-ம் தேதி தனது ஐந்தாவது கூட்டத்தை நடத்த உள்ளது.

மீண்டும் பிரதமராக பொறுப்பேற்றுள்ள மோடியின் தலைமையிலான புதிய அரசின் முதல் நிதி ஆயோக் ஆட்சியாளர்கள் குழு கூட்டம் இதுவாகும். இந்த சந்திப்பின் போது நீர் மேலாண்மை, விவசாயம், பாதுகாப்பு உள்ளிட்ட நாட்டின் தலையாய பிரச்சினைகள் குறித்து விவாதிக்கப்பட உள்ளதாகத் தெரிகிறது. இடதுசாரி ஊடுறுவல் அமைப்புகளால் ஜார்கண்ட் சத்தீஸ்கர் உள்ளிட்ட மாநிலங்களில் ஏற்பட்டுள்ள பாதிப்புகள் குறித்தும் முக்கியமாக விவாதிக்க உள்ளனர். இந்தக் குழு உருவாக்கப்பட்டதிலிருந்து தொடர்ந்து சந்திப்புகள் நடந்திருக்கின்றன. முதல் கூட்டம் பிப்ரவரி 8, 2015-ல் நடத்தப்பட்டது. இரண்டாவது சந்திப்பு ஜூலை 15, 2015-ல் நடத்தப்பட்டது.

இந்தக் கூட்டத்தின்போது முதல்வர்களை இணைத்து மூன்று துணை நிலை குழுக்களும், இரண்டு செயல்படுத்துதல் குழுக்களும் உருவாக்கப்பட்டன. 2017, ஏப்ரல் 23-ல் நடந்த மூன்றாவது சந்திப்பில்தான் பொதுத்தேர்தலையும், சட்டசபைத் தேர்தலையும் ஒன்றாக நடத்தவும், நிதி ஆண்டை ஜனவரி முதல் டிசம்பர் வரை என மாற்றவும் முடிவு செய்யப்பட்டது. ஜூன் 17, 2018-ல் நடந்த நான்காவது கூட்டத்தில் விவசாயிகள் வருமானத்தை இரட்டிப்பாக்கவும், அரசின் பிரதான திட்டங்களின் செயல்பாடுகளை மேம்படுத்தவும் திட்டங்கள் வகுக்கப்பட்டன.

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close