[X] Close

எல்பிஜி குழாய்ப் பாதை: ஐஓசி, பிபிசிஎல், ஹெச்பிசிஎல் ஒப்பந்தம்


  • kamadenu
  • Posted: 05 Jun, 2019 10:29 am
  • அ+ அ-

காண்ட்லா - கோர்காபூர் இடையே எல்பிஜி எரிவாயு குழாய்ப் பாதை அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது.

மொத்தம் 2,757 கிமீ தொலைவுக்கு அமையும் இந்த திட்டத்தை மேற்கொள்ள இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் (ஐஓசி), பாரத் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் லிமிடெட் (பிபிசிஎல்), இந்துஸ்தான் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் லிமிடெட் (ஹெச்பிசிஎல்) ஆகிய மூன்று நிறுவனங் களும் ஒப்புக் கொண்டுள்ளன. எரிவாயு குழாய் அமைப்பதற்கான ஒப்பந்தம் நேற்று டெல்லியில் கையெழுத்தானது.

இந்த திட்டத்தின்படி, மூன்று முக்கிய எரிவாயு கொள்முதல் நிலையங்களில் இருந்து எரிவாயுபெறப்பட்டு குஜராத், மத்திய பிரதேசம், உத்திர பிரதேசம், ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களில் உள்ள 22 எரி வாயு நிலையங்களுக்கு அனுப்பப்படும்.

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close