[X] Close

வளர்ச்சிக்கான சீர்திருத்தங்களை மேற்கொள்வதில் அரசு தீவிரம்: நிதி ஆயோக் தலைவர் ராஜிவ் குமார் கருத்து


  • kamadenu
  • Posted: 03 Jun, 2019 08:42 am
  • அ+ அ-

மத்தியில் பாஜக தலைமையில் புதிதாக ஆட்சிப் பொறுப்பேற்றுள்ள அரசு பொருளாதார வளர்ச்சியை ஊக்குவிக்கும் புதிய சீர்திருத்தங்களை மேற்கொள்வதில் முனைப்புடன் இருக்கிறது என நிதி ஆயோக் தலைவர் ராஜிவ் குமார் கூறியுள்ளார்.

ஆயுஷ் அமைச்சகம் ஏற்பாடு செய்திருந்த ஒரு நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பேசிய ராஜிவ் குமார் இந்தியாவில் பொருளாதார வளர்ச்சியை ஊக்குவிக்கவும், தனியார் முதலீடுகளை அதிகப்படுத்தவும், விவசாயத்தை நவீனப்படுத்தவும் அரசு திட்டமிட்டுள்ளது. அதற்கான சீர்திருத்தங்களையும் எடுக்க அரசு முனைப்புடன் உள்ளது என்றார்.

அடுத்த 100 நாட்களில் அரசு திட்டமிட்டுள்ள பல்வேறு புதிய சீர்திருத்தங்கள் குறித்த அறிவிப்புகள் வெளியாகும் என எதிர்பார்க்கலாம் என்றும் அவர் தெரிவித்தார். முதல்கட்டமாக ஆண்டுக்கு ரூ.6000 வழங்கும் திட்டத்தை அனைத்து விவசாயிகளுக்கும் விரிவுபடுத்தியதன் மூலம் 14.5 கோடி விவசாயிகள் பலன் அடைவார்கள். இதன் மூலம் கிராமப்புற பொருளாதாரம் மேம்படும் என்று தெரிவித்தார்.

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close