[X] Close

அமெரிக்காவின் வர்த்தக முன்னுரிமை ரத்து நடவடிக்கை: பொறியியல் துறையில் நெருக்கடி ஏற்படும் ஆபத்து


  • kamadenu
  • Posted: 03 Jun, 2019 08:41 am
  • அ+ அ-

இந்தியாவுக்கான வர்த்தக முன் னுரிமை அந்தஸ்தை அமெரிக்கா ரத்து செய்ததன் காரணமாக, பொறி யியல் சார் பொருட்களைத் தயாரிக் கும் துறைக்குப் பெரும் நெருக்கடி ஏற்படும் என்று நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

2018-19 நிதி ஆண்டில் இந்தி யாவிலிருந்து அமெரிக்காவுக்கு ஏற்றுமதி செய்யப்பட்ட பொறியி யல் சார் தயாரிப்புகளின் மதிப்பு 81 பில்லியன் டாலராக உள்ளது. இது அமெரிக்காவுக்கு இந்தியா விலிருந்து ஏற்றுமதியாகும் மொத்த மதிப்பில் பாதிக்கும் மேல் ஆகும்.அமெரிக்காவின் வர்த்தக முன் னுரிமை அந்தஸ்து திட்டத்தின் கீழ் ஆண்டுக்கு 5.6 பில்லியன் டாலர் வரிச்சலுகையை இந்திய ஏற்றுமதியாளர்கள் பெற்று பயன் அடைந்துவந்தனர். இதில் 2.5 பில் லியன் டாலர் வரிச் சலுகை பொறி யியல் துறை ஏற்றுமதியாளர் களுக்குச் சென்றது. இது கிட்டதட்ட மொத்த வரிச்சலுகையில் 44 சதவீதம் ஆகும்.

வர்த்தக முன்னுரிமை அந்தஸ்து பட்டியலிலிருந்து இந்தியாவை நீக்கம் செய்ததால் பொறியியல் துறைக்கு நெருக்கடி ஏற்பட உள் ளதாக துறை நிபுணர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து பொறியியல் தயா ரிப்புகள் ஏற்றுமதி மேம்பாட்டு ஆணையத்தின் முன்னாள் தலை வர் ராகேஷ் ஷா கூறியதாவது, “அமெரிக்காவின் இந்த நடவடிக் கையால் பொறியியல் துறைக்கு நெருக்கடி ஏற்படும். முக்கியமாக அதிக அளவிலான பொறியியல் தயாரிப்புகளை ஏற்றுமதி செய்து வருபவர்களுக்கு பெரிய இழப்பு ஏற்படும்.

வர்த்தகத் துறை அமைச் சராகப் பொறுப்பேற்றுள்ள பியுஷ் கோயல் இதற்குத் தகுந்த தீர்வை விரைவில் செயல்படுத்த வேண் டும் என்பதே ஏற்றுமதியாளர்களின் எதிர்பார்ப்பு” என்றார்.

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close