[X] Close

இனி பேஸ்புக், ட்விட்டர் விவரங்கள் அமெரிக்க விசாவுக்கு கட்டாயம்


  • kamadenu
  • Posted: 03 Jun, 2019 08:40 am
  • அ+ அ-

அமெரிக்க விசாவுக்கு விண்ணப்பிக்கும் போது பேஸ்புக், ட்விட்டர் போன்ற சமூக வலைதள முகவரி விவரங்களையும் இனி வழங்க வேண்டும் என்ற புதிய விதியை அமெரிக்க அரசு கொண்டுவந்திருக்கிறது. இது நாள் வரையில் சந்தேகத்திற்கிடமான நபர்களின் சமூக வலைதள கணக்குகள், மின்னஞ்சல் முகவரி, தொலைபேசி எண் போன்றவை பெறப்பட்டு வந்தன.

தற்போது அனைத்து நபர்களும் அந்த தகவல்களை குறிப்பிட வேண்டும்.

இதற்கு ஏற்ற வகையில் விசா விண்ணப்பப் படிவம் மாற்றப்பட்டிருக்கிறது. இது தவிர்த்து, குடும்ப உறுப்பினர்கள் யாராவது தீவிரவாத செயல்களில் ஈடுபட்டு இருக்கிறார்களா என்ற தகவல்களையும் அளிக்க வேண்டும். தீவிரவாத ஊடுருவலை தடுப்பதற்காக இந்த புதிய சட்டம் கொண்டுவரப்பட்டுள்ளது.

இந்தப் புதிய சட்டத்தால், அமெரிக்காவில் குடியேற விண்ணப்பிக்கும் 7 லட்சம் பேர் மட்டுமல்லாமல், அமெரிக்காவுக்குப் பயணிக்கும் 14 மில்லியன் பயணிகளும் பாதிக்கப்படக் கூடும் என்று தெரிகிறது. அரசு ரீதியாக பயணிப்பவர்களுக்கு மட்டும் இதிலிருந்து விலக்குஅளிக்கப்பட்டு் உள்ளது.

வாக்களிக்கலாம் வாங்க

'கேம் ஓவர் ' உங்கள் ஸ்டார் ரேட்டிங் என்ன?

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close