[X] Close

மோடி அரசின் சீர்திருத்தங்கள் இந்தியாவை பலமிக்க நாடாக மாற்றும்: அமெரிக்கா - இந்தியா தொழில் ஆலோசனை குழு


  • kamadenu
  • Posted: 03 Jun, 2019 08:39 am
  • அ+ அ-

மோடி அரசு மேற்கொள்ளும் சீர்திருத்தங்கள் இந்தியாவை பலமிக்க நாடாக மாற்றும் என்று அமெரிக்கா - இந்தியா வர்த்தக ஆலோசனை குழு தெரிவித்துள்ளது.

பெரும்பான்மை வெற்றியோடு மீண்டும் ஆட்சிக்கு வந்திருக்கும் பிரதமர் மோடியின் தலைமையிலான அரசு, உலக அளவில் பெரிய எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது. மோடியின் அரசிடமிருந்து துணிச்சலான சீர்திருத்தங்கள் எதிர்பார்க்கப்படுகின்றன.

 ‘இந்திய மக்கள், அவர்களின் வாழ்க்கை தரத்தை உயர்த்தக் கூடிய, வேலைவாய்ப்பை உருவாக்கக் கூடிய, இந்திய பொருளாதாரத்தை மேம்படுத்தக் கூடிய ஒரு தலைவர் நாட்டை வழிநடத்த விரும்புகின்றனர். அதற்கான பொருத்தமான தலைவர் மோடி என்று அவர்கள் நம்புகின்றனர். அதன் வெளிப்பாடாகத்தான் மீண்டும் மோடியை அவர்கள் தேர்வு செய்திருக்கிறார்கள்’ என்று யுஎஸ்ஐஎஸ்பிஎஃப் அமைப்பின் தலைவர் முகேஷ் அகி கூறினார்.

மேலும் ‘இந்த புதிய அரசு வெகு விரைவிலேயே பொருளாதாரம் சார்ந்த சீர்திருத்தங்களை மேற்கொள்ள வேண்டும். முக்கியமாக தொழிலாளர் சீர்திருத்தம் மற்றும் நில சீர்திருத்தங்களை மேற்கொள்வது குறித்து பரிசீலிக்க வேண்டும். அதன் மூலம்தான் பெரு நிறுவனங்களின் முதலீடுகளை ஈர்க்க முடியும்’ என்று அவர் கூறினார்.

இந்தியா மற்றும் அமெரிக்காவுக்கு இடையேயான வர்த்தகம் தொடர்பாக அவர் கூறுகையில், இரு நாடுகளுக்கும் இடையேயான வர்த்தக உறவு நல்ல வளர்ச்சியை நோக்கி சென்று கொண்டிருக்கிறது. தற்போது இந்த இரு நாடுகளுக்கிடையேயான வர்த்தகம் 142 பில்லியன் டாலர் அளவில் உள்ளது. இன்னும் பத்தாண்டுகளில் அது 500 பில்லியன் டாலர் அளவில் இருக்கும் என்றார்.

மேலும், கடந்த நான்கு ஆண்டுகளில் 50 பில்லியன் டாலர் அளவில் அமெரிக்க நிறுவனங்கள் இந்தியாவில் முதலீடு செய்திருக்கின்றன. கிட்டத்தட்ட 3.2 மில்லியன் வேலைவாய்ப்புகள் அதனால் உருவாகி இருக்கின்றன. தற்போது அமெரிக்கா - சீனா இடையே வர்த்தகப் போர் நடந்து வருகிறது. அதனால் இனி அமெரிக்கா - இந்தியா உறவு இன்னும் வலுப்படும் என்றார்.

அமெரிக்காவின் பண கண்காணிப்பு பட்டியலிலிருந்து இந்தியாவை விடுவித்தது தொடர்பாக அவர் கூறியதாவது, இந்தியாவைப் பண கண்காணிப்பு பட்டியலில் சேர்த்ததே தவறு. தற்போது அந்த தவறு உணரப்பட்டு பட்டியலில் இருந்து இந்தியாவின் பெயர் விடுவிக்கப்பட்டு இருக்கிறது என்றார்.

இந்திய அரசு பொருளாதார ரீதியாக சில மேம்பாட்டு நடவடிக்கைகளை மேற்கொண்டிருக்கிறது. அதனால் இந்தியாவை பண கண்காணிப்பு பட்டியலில் வைத்திருக்க வேண்டிய அவசியமில்லை என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டிருக்கிறது.

வாக்களிக்கலாம் வாங்க

'கேம் ஓவர் ' உங்கள் ஸ்டார் ரேட்டிங் என்ன?

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close