[X] Close

சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் துறையில் வேலைவாய்ப்பை அதிகரிக்க முழு வலிமையுடன் செயல்படுவோம்: மத்திய அமைச்சர் நிதின் கட்கரி நம்பிக்கை


  • kamadenu
  • Posted: 03 Jun, 2019 08:40 am
  • அ+ அ-

சாலைப் போக்குவரத்து துறை யுடன் கூடுதலாக சிறு, குறு மற் றும் நடுத்தர தொழில் துறை அமைச்சராகவும் பொறுப்பேற் றுள்ள நிதின் கட்கரி எம்எஸ்எம்இ துறையில் வேலைவாய்ப்புகளை அதிகரிக்க முழு வலிமையுடன் செயல்படுவோம் என நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

வேலை இல்லா திண்டாட் டம் நாட்டின் மிகப்பெரிய பிரச் சினையாக உருவெடுத்திருக்கிறது. கடந்த 45 வருடங்களில் இல்லாத அளவுக்கு வேலை இல்லா திண் டாட்டம் 6.1 சதவீதமாக உயர்ந்திருக் கிறது என்ற புள்ளிவிவரங்கள் பல்வேறு விவாதங்களைக் கிளப் பியுள்ளன. இந்நிலையில், சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் துறையின் அமைச்சராகப் பொறுப்பேற்றுள்ள நிதின் கட்கரி செய்தியாளர்கள் சந்திப்பில் வேலைவாய்ப்பு குறித்து பேசி உள்ளார்.

அப்போது அவர் கூறியதாவது, “சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் துறையில் பிரதானமாக உள்ள பிரச்சினை நாட்டின் பொருளாதார வளர்ச்சியும் வேலைவாய்ப்பும். இந்தத் துறையிலிருந்து வேலை வாய்ப்புகளை அதிகரிக்க வேண் டும் என்பது பிரதமரின் முக்கிய எதிர்பார்ப்பாக உள்ளது. தற்போது இந்தத் துறையில் வேலைவாய்ப்பு என்பது மிகக் குறைவாக உள் ளது. இதை ஊக்குவிக்கும் பொருட்டு முழு வலிமையுடன் செயல்படுவோம்” என்றார்.

மேலும், சாலைப் போக்குவரத்து அமைச்சராக அடுத்த ஐந்து ஆண்டுகளில் இந்திய மக்கள் தொகைக்கு நிகராக சாலை ஓரங் களில் 125 கோடி மரங்கள் நடப் படும் என்று கூறியுள்ளார். ஒரு நாளைக்கு 40 கிமீ வீதம் அடுத்த ஒன்றரை ஆண்டுகள் சாலை அமைக்கும் பணிகளும் திட்டமிடப் பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித் தார்.

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close