[X] Close

ஐஎல் அண்ட் எஃப்எஸ் விவகாரம்; ஆடிட்டர்கள், தணிக்கை நிறுவனங்களுக்குத் தடை: நிறுவன விவகாரத் துறை நடவடிக்கை


  • kamadenu
  • Posted: 02 Jun, 2019 08:46 am
  • அ+ அ-

நிறுவன விவகாரத் துறை அமைச்சகம் ஆடிட்டர்கள் மற்றும் தணிக்கை நிறுவனங்கள் சிலவற்றுக்கு தடை விதித்துள்ளது. இது தொடர்பான நடவடிக்கைகளை எடுக்க பிராந்திய அலுவலகங்களுக்கு அதிகாரங் களும் அளிக்கப்பட்டுள்ளன.

தணிக்கை நிறுவனங்களான பிஎஸ்ஆர் கோ, டிலாய்ட் ஹஸ்கின்ஸ் அண்ட் செல்ஸ் (டிஹெச்எஸ்) உள்ளிட்டவற்றுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. நிதி நெருக்கடியில் திவாலாகும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ள ஐஎல் அண்ட் எஃப்எஸ் நிறுவனத்தின் கணக்கு, வழக்குகளை இந்நிறுவனங்கள்தான் தணிக்கை செய்தன. இந்நிறுவனங்கள் உண்மைக்குப் புறம்பாக தவறான கணக்குகளை வெளியிட்டுள்ளது கண்டு பிடிக்கப்பட்டது. இதையடுத்தே இந்நிறுவனங்களுக்கு தடை விதிக்கும் நடவடிக்கையை அமைச்சகம் எடுத்துள்ளது.

நிறுவன சட்டம் 140 (5)-ன் கீழ் டிஹெச்எஸ், பிஎஸ்ஆர் ஆகிய நிறுவனங்களும், உதயன் சென், கல்பேஷ் மேத்தா, சம்பத் கணேஷ், ஷ்ரெய்னிக் பெய்ட், ராகேஷ் ஜெயின், நிஷித் உதானி, அன்ஜூ ரவாத், பாயல் ரதோட், ஏபி ஷா அண்ட் ஏபி ஷா அண்ட் அசோசியேட்ஸ் ஆகிய தணிக்கையாளர்கள் மற்றும் தணிக்கை நிறுவனங்களுக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

தவறான தணிக்கை அறிக்கையை வெளி யிட்ட இந்நிறுவனங்கள் மற்றும் தணிக்கை யாளர்களின் சொத்துகளை பறிமுதல் செய் வதற்கான நடவடிக்கைகளை எடுக்குமாறு அந்தந்த பிராந்திய இயக்குநர்களுக்கு நிறுவன விவகாரத் துறை அமைச்சகம் மே 29-ம் தேதி அனுப்பிய கடிதத்தில் உத்தரவிட்டுள்ளது. அதில் சட்ட விதி 241 மற்றும் 242-ன் கீழ் நிறுவனங்கள் மற்றும் தனி நபர்களின் அசையும் மற்றும் அசையா சொத்துகளை பறிமுதல் செய்யுமாறு அறிவுறுத்தியுள்ளது. வங்கி லாக்கர்கள், வங்கிக் கணக்கு ஆகியவற்றையும் முடக்குமாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நிறுவன மோசடிகளை விசாரிக்கும் அலுவலகம் (எஸ்எஃப்ஐஓ), ஆடிட்டர்கள் மீது வழக்குப்பதிவு செய்து அவர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

வாக்களிக்கலாம் வாங்க

'கேம் ஓவர் ' உங்கள் ஸ்டார் ரேட்டிங் என்ன?

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close