[X] Close

பிரதமர் இன்று பதவியேற்பு: பங்குச்சந்தைகளில் வர்த்தகம் உயர்வு


  • kamadenu
  • Posted: 30 May, 2019 13:08 pm
  • அ+ அ-

-Janarthanaperumal S_50242

பிரதமர் மோடி இன்று 2-ம் முறையாக பதவியேற்கவுள்ளதன் எதிரொலியாக பங்குச்சந்தைகளில் வர்த்தகம் உயர்ந்தது.

மக்களவைத் தேர்தலில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி அமோக வெற்றி பெற்றது. ஆட்சி அமைக்க தேவையான பெரும்பான்மை பலத்தை காட்டிலும் அதிக தொகுதிகளில் அக்கூட்டணி வெற்றி பெற்றுள்ளது. இதனைத் தொடர்ந்து, நரேந்திர மோடி குடியரசுத் தலைவர் மாளிகையில் இன்று மாலை 7 மணிக்கு பிரதமராக பதவியேற்கவுள்ளார்.  அவருடன் சேர்ந்து மத்திய அமைச்சர்களும் பதவியேற்கவுள்ளனர்.

மோடி மீண்டும் பிரதமராக பதவியேற்கவுள்ளதன் தாக்கம் பங்குச்சந்தைகளில் இன்று எதிரொலித்தது. மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண்ணான சென்செக்ஸ் 323 புள்ளிகள் உயர்ந்து 39,825 புள்ளிகளை தொட்டது. இதேபோல் தேசிய பங்குச்சந்தையிலும் வர்த்தகம் உயர்ந்து காணப்படுகிறது. தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண்ணான நிப்டி, 83 புள்ளிகள் உயர்ந்து 11,944 புள்ளிகளாக அதிகரித்தது.

பாஜக கூட்டணி அதிக இடங்களில் வெற்றி பெறும் என்ற தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்புகள் காரணமாக மே 20-ம் தேதி பங்குச்சந்தைகளில் வர்த்தகம் ஏற்றம் கண்டன. சென்செக்ஸ் 39352 புள்ளிகளாகவும், நிப்டி 11828 புள்ளிகளாக உயர்ந்தது. பின்னர் அடுத்தடுத்த நாட்களில் மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண்ணான சென்செக்ஸ் 40 ஆயிரம் புள்ளிகளை கடந்தது. மக்களவைத் தேர்தல் முடிவுகள் வெளியான மே 23-ம் தேதியும் பங்குச்சந்தைகள் புதிய உச்சத்தை தொட்டன.      

 

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close