[X] Close

மக்களின் சேமிப்பு நிதியிலிருந்து ரூ.2,400 கோடி கடன் அரசிடம் அனுமதி கோரும் ஏர் இந்தியா


2-400

  • kamadenu
  • Posted: 30 May, 2019 09:04 am
  • அ+ அ-

நிதி நெருக்கடியில் உள்ள ஏர் இந்தியா தேசிய சிறு சேமிப்பு நிதியிலிருந்து ரூ.2,484 கோடி கடன் பெறுவதற்கு அரசிடம் அனுமதி கோரி உள்ளது. ரூ.58 ஆயிரம் கோடி கடனில் உள்ள ஏர் இந்தியா பங்கு விலக்கல் நடவடிக்கைக்கு உட்படுத்தப்பட உள்ளது. இந்நிலையில் தொடர்ந்து விமான சேவையை வழங்குவதற்கான செயல்பாடுகளுக்கு தேவையான மூலதனம் பற்றாக்குறையாக இருப்பதால் கடன் வாங்க முடிவு செய்துள்ளது.

கடந்த மே 14-ம் தேதி ஏர் இந்தியா நிர்வாகிகள், விமானப் போக்குவரத்து துறை செயலர் பிரதீப் சிங் கரோலா ஆகியோர் ஏர் இந்தியாவின் நிதி நிலைமை குறித்து விவாதித்து சில முடிவுகளை எடுத்துள்ளனர். அதில் கடன் வாங்குவது குறித்து முடிவு செய்யப்பட்ட தொகை இல்லாமல், தற்போது கூடுதலாக நிதி தேவைப்படுவதாக ஏர் இந்தியா தரப்பு கூறுகிறது. மேலும், பட்ஜெட்டில் மோடி அரசு தருவதாகச் சொன்னநிதியில் ரூ.2,484 கோடி மீதம் இருப்பதாகவும் தெரிவித்துள்ளது.

அந்த நிதியை மக்களின் தேசிய சிறு சேமிப்பு நிதியிலிருந்து பெறுவதற்கு அரசிடம் அனுமதி கோரியுள்ளதாகவும் கூறியுள்ளது. இதற்கான வட்டி அரசுக்கு நேரடியாகச் செலுத்தப்படும். மேலும் சேமிப்பு நிதியிலிருந்து பெறப்படும் கடன் வங்கிகளிடம் வாங்குவதைக் காட்டிலும் 0.5 சதவீதம் வட்டி குறைவாக இருக்கும் என்று ஏர் இந்தியா அதிகாரிகள் கூறுகின்றனர்.

Advt:

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close