[X] Close

காசோலை பரிவர்த்தனைக்கென தனி இயந்திரம்: இந்தியன் ஓவர்சீஸ் வங்கி திறப்பு


  • kamadenu
  • Posted: 29 May, 2019 08:46 am
  • அ+ அ-

இந்தியன் ஓவர்சீஸ் வங்கி காசோலை பணபரிவர்த்தனைக் கென தனி இயந்திர வசதியை அறிமுகப்படுத்தி இருக்கிறது. பணம்எடுப்பதற்கு மற்றும் செலுத்துவதற்கு ஏடிஎம் வசதி பயன்படுத்தப்பட்டு வருகிறது. ஆனால் இந்தியன் ஓவர்சீஸ் வங்கியின் வாடிக்கையாளர்கள், காசோலை பரிவர்த்தனைக்கு வங்கிக்கு செல்ல வேண்டிய நிலை இருந்து வந்தது.

இந்நிலையில் காசோலை பரிவர்த்தனைக்கென தனி இயந்திரத்தை இந்தியன் ஓவர்சீஸ் வங்கி தற்போதுஅறிமுகப்படுத்தி இருக்கிறது.

இனி காசோலை பரிவர்த்தனைக்கு வங்கிக்கு செல்ல வேண்டிய தேவை இல்லை. வாடிக்கையாளர்கள் இந்த இயந்திரத்தின் மூலம் சுயமாகவே காசோலைபரிவர்த்தனையை மேற்கொள்ளலாம். இந்தத் திட்டத்தின் மூலம்காசோலை சம்பந்தமான பணப்பரிவர்த்தனை எளிதாக்கப்பட்டுள்ளது என்று இந்தியன் ஓவர்சீஸ்வங்கியின் தலைமை நிர்வாக அதிகாரி சுப்ரமணியகுமார் தெரிவித்துள்ளார். முதல் கட்டமாக பெரிய நகரங்களில் உள்ள அனைத்து ஐஓபி கிளைகளிலும் பிறகு படிப்படியாக மற்ற கிளைகளிலும் இந்த வசதி ஏற்படுத்தப்படும் என்று அவர் மேலும் தெரிவித்தார்.

மொபைல் வங்கி

இந்தியன் ஓவர்சீஸ் வங்கி ‘நடமாடும் வங்கி’ என்ற புதிய வசதியையும் அறிமுகப்படுத்தி இருக்கிறது. ஏடிஎம் மற்றும் பிற வங்கி சேவைகள் அனைத்தையும் வாகனத்தில் உள்ளடக்கப்பட்டு நகரங்களில் வலம் வரும். வாடிக்கையாளர்கள் அங்கு வங்கியின் சேவைகளை பெற்றுக்கொள்ளலாம். மூத்த குடிமக்கள் உள்ளிட்டவாடிக்கையாளர்கள் பயன்பெறும் நோக்கத்தில் இந்த வசதி அறிமுகப்படுத்தப்பட்டு இருப்பதாக வங்கி தெரிவித்துள்ளது.

முதல் கட்டமாக தமிழ்நாடு, கேரளா, விஜயவாடா ஆகிய மாநிலங்களில் இந்த நடமாடும்ஏடிஎம் வசதி ஏற்படுத்தப்படும். தமிழகத்தில் சென்னை, கன்னியாகுமரி, கரூர், நாகப்பட்டினம் ஆகிய நகரங்களில் இந்தமொபைல் வாகனம் அறிமுகப்படுத்தப்படுகிறது.

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close